லோக குரு
சங்கராச்சாரி?
நம்மை பார்த்தால்
குளிப்பார்!
நாம் கிட்டே
நெருங்கினால்
குளிப்பார்!
நம்மோடு பேசினால்
குளிப்பார்!
தமிழில் பேசினால்
குளிப்பார்!
நம்மை தொட்டால்
குளிப்பார்!
நாம் தொட்டதை
தொட்டால்
குளிப்பார்! ஆம்
நாம் இல்லை
என்றால்
நாற்றம் எடுத்த
நாதாரி
குளிக்காமலே
இருந்திருப்பார்…!!
– கவிஞர் சிற்பி சேகர், பட்டுக்கோட்டை