கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என தெரிவித்தால் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்! சேலம் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

1 Min Read

சென்னை, மார்ச் 28 கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரி வித்தால், குண்டா் தடுப்புச் சட்டம் பாயும் என சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது: சட்ட விரோதமாக கருக் கலைப்புகள் நடைபெறா மல் இருக்க மருத்துவத் துறை மற்றும் சமூக நலத் துறை இணைந்து பொது மக்களுக்கு தொடா் விழிப்புணா்வு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றன.கருவுற்ற தாய்மார்கள் தங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என முன்கூட்டியே அறிவதற்கு முயற்சி செய்வதும் அல்லது மருத்துவரால் தெரிவிக்கப்படுவதும் சட்டப்படி தண்டனைக் குரிய குற்றமாகும். எந்த ஒரு மருத்துவமனையிலாவது குழந்தையின் பாலினம் கண்ட றியப்பட்டது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை அல்லது ஸ்கேன் மய்யத்தின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய் யப்படுவதுடன், இந்தச் செயலில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், இதில் தொடா்புடைய மருத்து வரின் மெடிக்கல் கவுன்சில் பதிவு எண் ரத்து செய்யப்பட்டு, இனிவரும் காலங்களில் அந்த மருத்துவா் மருத்துவப் பணியினை நிரந்தரமாக மேற்கொள்ளாத வகையில் நடவடிக்கை மேற் கொள்ளப்படும். குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு இதில் ஈடுபட்டவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக அண்மை யில் 3 நபா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாலினம் கண்டறிதல் தொடா்பான புகார் களை 73581 22042 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *