இதுதான் உ.பி. பிஜேபி மாடல் ஒன்னு வாங்குனா ஒன்னு ஃப்ரீ..‘குடிமகன்கள்’ கொண்டாட்டம்!

1 Min Read

ஒன்னு வாங்குனா ஒன்னு ஃப்ரீன்னு எந்த பொருளுக்கு அறிவிப்பு வந்தாலும் கூட்டம் பிச்சிக்கும். சரக்குக்கு வந்தா சொல்லவா வேணும்? உ.பி. முழுக்க பல ஒயின் ஷாப்கள்ல இந்த ஆஃபர் கொடுத்துருக்காங்க. அதனால், குடிமகன்கள் பெட்டி பெட்டியா சரக்க வாங்கிட்டுப் போறாங்க. ஏப். 1-க்கு அப்புறமா அங்க புதிய கலால் கொள்கை அறிமுகம் ஆகுறதால, கையிருப்புல இருக்க சரக்க சீக்கிரமா விக்க வேண்டிய நெலம வந்ததுதான் இதுக்கு காரணமாம்!

யோகி அலுவலகத்தை
அமலாக்கத் துறை சோதிக்குமா?
அதிஷி பாய்ச்சல்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மதுக்கடைகளில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என அறிவிக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. இதை சுட்டிக் காட்டி மக்களை குடிகாரர்களாக்க யோகி அரசு முயல்கிறதா? என டில்லி மேனாள் முதலமைச்சர் அதிஷி கேள்வி எழுப்பி யுள்ளார். மதுபானங்களை இலவசமாக கொடுப்பதில் ஊழல் இல்லையா? என கேள்வி எழுப்பிய அவர், யோகி அலுவலகத்தில் அமலாக்கத் துறை, சி.பி.அய்., (ED, CBI) சோதனை செய்யுமா என்றும் வினவியுள்ளார்.

தமிழ்நாட்டு வணிக நிறுவனத்திற்கு தேசிய விருது

சென்னை, மார்ச் 28 மும்பையில் இயங்கி வரும் நியாய வணிக நடைமுறைகளுக்கான கவுன்சில் அமைப்பு நடத்திய தேசிய விருது வழங்கும் விழாவில், தேசிய அளவில் நியாயமான வணிக நடைமுறைகளைக் கடைப்பிடித்தமைக்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்தி மசாலா நிறுவனத்திற்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான ஜம்னலால் பஜாஜ் தேசிய விருது (Jamnalal Bajsj National Award) வழங்கப்பட்டது. ‘தயாரிப்பு நிறுவனங்கள் – பெரிய தொழிற்சாலை’ (Manufacturing Enterprise – Large Scale) என்ற பிரிவிற்கான இந்த விருதை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேனாள் மேலாண் இயக்குநர் . ரவிகாந்த் வழங்கினார். டாக்டர் பி.சி. துரைசாமி, டாக்டர் சாந்தி துரைசாமி மற்றும் செல்வன் செங்கதிர்வேலன் ஆகியோர் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் இவ்விருதினைப் பெற்றுக் கொண்டனர். ‎

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *