ஒரு நாட்டுக்கும், அதன் மக்களுக் கும் ஆபத்தோ, எதிர்ப்போ, சதித் திட்டங்களோ சவாலாக வரும் நேரத் தில், நல்லெண்ணம் கொண்ட தலைவர்கள், அவற்றை எதிர்கொள்ள மக்களிடையே அதனை விளக்குவர், திட்டங்களைத் தருவர் – வேண்டுகோள் வைப்பர். அந்த வகையில் அமெரிக்க அதிபராகி இரண்டாண்டுகள் கழிந்து 1863ஆம் ஆண்டில் ஆப்ரகாம் லிங்கன் தன் நாட்டு மக்களிடையே, கெட்டீஸ்பர்க் (Gettysburg) உரை என்ற புகழ் பெற்ற உரையை நிகழ்த்தினார்.
‘நம் முன்னோர்கள் 87 ஆண்டுகளுக்குமுன் இந்த கண்டத்தை உருவாக்கினார்கள். ஒரு புதிய நாடு சுதந்திரம் என்ற கருத்துவத்தில் உருவானது. அனைத்து மக்களும் பிறப்பால் ஒன்றே என்ற கோட்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட நாடு. நாம் இன்று ஒரு உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளோம். (Now we are engaged in a great civil war) – நாம், போர் நடைபெறும் போர்க்களத்தில் உள்ளோம். (We are met on great battle field of that war) இந்த அரசு, பாதி மக்கள் அடிமைகளாகவும், பாதி மக்கள் சுதந்திரமாகவும் என்றும் இந்த நிலையில் இருக்க அனுமதிக்காது. (This Government cannot endure permamently half slave and half free).
இத்தாலிய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய, மாஜினியும், கரிபால்டியும் மக்களிடையே, ‘‘என் பின்னால் வந்தால் போர்க்களங்கள், இரத்த ஆறுகள், சிறைவாசம் இவற்றை மட்டுமே நீங்கள் அனுபவிக்க முடியும். இதற்குத் தயார் என்ற மனம் உள்ளவர்கள் மட்டுமே என் பின்னால் வரட்டும்’’ என்று முழங்கி, மக்கள் நலனை மனதில் ஏந்தி போர் முரசு கொட்டினார்கள்.
மேற்கண்டவற்றை நினைக்கவும், குறிப்பிடவும் தூண்டுகோலாக அமைந்தது. 23.2.2025 ‘விடுதலை’ இதழில் வந்த ‘ஒரு கை பார்க்க வேண்டியதுதான்’ என்ற முழக்கத்துடன் அமைந்த குடிஅரசின் தலையங்கம்.
போர்க்களம் பல கண்ட பகலவன் பெரியார், ஒரு போர் அணிவகுப்பின் முன்னே நின்று எதிர்நோக்கி இருக்கும் போர்க்களத்தைப் பற்றி, படையின் பல பிரிவுத் தளபதிகளிடையே எழுச்சி உரை ஆற்றும் போர்ப் படைத்தலைவராகக் காணப்படுகிறார்.
அவர் முன்னே, முப்படைத் தளபதிகளாக கையில் வாளும், கேடயமும் ஏந்தி தலைவரின் உரையை, கண்ணிமைக்காமல் கேட்கும் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திராவிட மாடல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிற்பதாகக் கற்பனை செய்து பார்க்கிறேன்.
தந்தை பெரியார் ஹிந்தி திணிப்புப் பற்றிய விரிவான விளக்கத்துடன், அதனால் ஏற்படும் தீமைகளையும் கூறி, அதனை முறியடிக்க, யார் யார் எப்படி எப்படி பங்களிப்பை வழங்க வேண்டும்’ என்று ஒரு பகுப்பாய்வு முறையில் (Analytical) எடுத்து வைக்கிறார்.
இளைஞர்களுக்கு வேண்டுகோள் – பெரியவர்களுக்கு விண்ணப்பம் – செல்வர்களுக்கு ஒரு வார்த்தை போன்ற தலைப்புகள் இதனைத் தெளிவாக விளக்கும்.
‘கோடை விடுமுறை முடிந்த உடன், ஹிந்தி கட்டாயப் பாஷா முறை அமலுக்கு வரப் போகிறது. ஆகையால் அதிக அவகாசம் இல்லை. சகல பொறுப்புகளும் மானமுள்ள சகல இளைஞர் கையில் இருக்கிறது. அவர்கள் சரியாய் நடத்தப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்துவது, போர் முறையின் (Strategy) அணுகுமுறையில் அவர் வல்லுநர் என்பதைக் காட்டுகிறது.
‘ஆச்சாரியார் ஹிந்தியைப் புகுத்தி விட்டுத்தான் மறுகாரியப் பார்ப்பது என்கிற விரதம் பூண்டு விட்டார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரின் விரதம் முறியடிக்கப்பட்டு, அவரே ‘ஹிந்தி எப்பொழுதுமில்லை, ஆங்கிலம் எப்பொழுதும் உண்டு.
Hindi Never, English Ever என்று கூறுமளவுக்கு வெற்றி வாகை சூடியவர் தந்தை பெரியார்.
இன்று இரண்டாம் மொழிப் போரை தளபதி மானமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அண்ணா – கலைஞர் வழங்கிய உணர்வு வாளேந்தி, மானம் என்ற கவசம் பூண்டு ‘‘எப்பக்கம் வந்து புகுந்து விடும். ஹிந்தி எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும் பங்கம் விளைந்திடின் தாய் மொழிக்கே உடற் பச்சை ரத்தம் பரிமாறிடுவோம்’’ என்ற பண்ணிசைத்து, பனிமலை இமயத்தில் தமிழ்க்கொடி ஏற்ற பெரியார் மண் என்றும் தோள் கொடுக்கும்.
புறப்படட்டும் தமிழ்ப் படை ெலப்ட், ரைட் – ெலப்ட், ரைட்.