உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பெரியாருடைய கொள்கைகளைப்பரப்பி வரும்
ஆசிரியரை முன்மாதிரியாகக் கொண்டு
சம வயதுடையவர்கள் செயல்படவேண்டும்!
சிங்கப்பூர், மார்ச் 28 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை அறிந்து சிங்கப்பூரின் தமிழ்த் துறையின் மூதறிஞர் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்கள் தன்னுடைய மகிழ்ச்சியை, வாழ்த்துகளை ஒலிப்பதிவு செய்து அனுப்பியிருந்தார்.
அவருடைய ஒலிப்பதிவின் விவரம் வருமாறு:
அய்யா, வணக்கம்!
திண்ணப்பன் பேசுகிறேன். நீங்கள் ஆஸ்திரேலியாவில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டிருக்கும்போது, என்னுடைய கொழுந்தியாள் மகன், அண்ணாமலை வீட்டிற்குச் சென்றீர்கள் என்றும், அவர் வீட்டில் உணவருந்தியதுபற்றியும், உங்களுடன் அவர் நிழற்படம் எடுத்துக்கொண்டார் என்பதைப்பற்றியும் நான் அறிந்தேன். அந்த நிழற்படங்களை எனக்கும் அனுப்பியிருந்தார். மிக்க மகிழ்ச்சி!
நம்முடைய உறவு இன்னும் பலப்படட்டும்.
நீங்கள், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பெரியாருடைய கொள்கைகளைப்பரப்பி வருவது கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
உங்களை முன்மாதிரியாகக் கொண்டு, சம வயதுடையவர்கள் செயல்படவேண்டும்.
எனக்கு நீங்கள்தான் முன்மாதிரி. இந்த வயதிலும், படிப்பு, பரபரப்பு, உழைப்பு என்று பல வகைகளிலும் பலருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறீர்கள்.
அம்மாவைக் கேட்டதாகச் சொல்லவும். அவர் உங்களுடன் சுற்றுப்பயணத்தில் வரவில்லை என்று நினைக்கிறேன். உங்களுடன் அருள்மொழி வந்திருக்கின்றார் என்பதையும் அறிந்தேன், மகிழ்ச்சி!
இன்னும் சிறப்பாக நீங்கள் பணியாற்ற விழைகிறேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு முனைவர் சுப.திண்ணப்பன் தன்னுடைய ஒலிப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.