முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்
சென்னை, மார்ச் 28 தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரி வித்துள்ளார். ஜனநாயகத்தின் சம நிலையை அச்சுறுத்தும் முயற்சிக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்பதை வலுப்படுத்துகிறது. இது வெறும் தொடக்கம்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறி யதாவது:
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நீதி, சமத்துவம் மற்றும் கூட்டாட்சி உணர்வை நிலைநிறுத்தும் நியாயமான எல்லை நிர்ணயத்தை கோரும் ஒரு முக்கிய தீர்மானத்தை தெலங்கானா மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றுவதன் மூலம், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். தமிழ்நாட்டின் வழியைப் பின்பற்றி, நமது ஜனநாயகத்தின் சமநிலையை அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சி யையும் எதிர்ப்பதற்கான கூட்டு அழைப்பை இந்தச் சட்டம் வலுப்படுத்து கிறது. இது வெறும் ஆரம்பம். இரண்டா வது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் அய்தராபாத்தில் நடைபெற உள்ள நிலையில், மேலும் பல மாநிலங்கள் அதைத் தொடர்ந்து வரும். இந்தியாவின் எதிர்காலத்தை நியாயமற்ற முறையில் மீண்டும் வரைய யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
