சோவியத் ஒன்றியத்தின் தலைவர் மார்ஷல் ஸ்டாலினுக்கு தெய்வீகத்திலும் அதைப் பற்றிய குருட்டுக் கொள்கைகளிலும் அறவே நம்பிக்கை கிடையாது. முக்கியமாக சோதிடப் புரட்டுகளை வெறுத்தொதுக்குபவர். சோதிடத்தில் அவருக்குக் கொஞ்சங்கூட நம்பிக்கையில்லை. சோதிடர்களை வெறுப்பவர் – இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியுள்ளது.
ஸ்டாலின் பிறந்த ஊரான டிப்ளிசில் பிறந்த ஓர் சோதிடன் புரட்டுச் சோதிடம் கூறிச் திரிந்த குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தான். அவன் சிறையிலிருந்தபடியே 1938ஆம் ஆண்டு மார்ஷல் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதி, தன்னை மன்னிக்குமாறு மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.
இக்கடிதத்தை மார்ஷல் ஸ்டாலின் பெற்றதும் அதே கடிதத்தின் ஓர் ஓரத்தில் “மன்னிப்பு இல்லை. சோதிடம் கூறுவது மிக மிகக் கொடியது” என்று குறிப்பெழுதி திருப்பி அனுப்பிவிட்டார்.
(டைம்ஸ் ஆப் இந்தியா)