சென்னை, மார்ச் 27 தமிழ்நாடு வானிலை மய்யத்தின் இணைய பக்கத்தில் தமிழ் ஆங்கிலத்தோடு ஹிந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு வானிலை மய்யத்தின் இணைய பக்கத்தில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வானிலை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தன. தற்போது தமிழ், ஆங்கிலத்தோடு சேர்த்து மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய மாநிலங்களான கருநாடகா, ஆந்திரா, கேரளாவின் வானிலை மய்ய இணைய பக்கத்தில் தாய்மொழியோடு ஆங்கிலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஹிந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஒன்றிய அரசு ஹிந்தியைத் திணிப்பதாக தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ்நாடு வானிலை மய்யத்தின் இணைய பக்கத்தில் ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.