சிறுபான்மை மக்களுக்கு விரோதமான ஒன்றிய அரசின் வக்ஃபு பற்றிய சட்டத் திருத்தத்தைக் கைவிடவேண்டும்!

1 Min Read

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்

சென்னை, மார்ச் 27– சிறுபான்மை மக்களான இஸ்லாமி யர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு சட்டத் திருத்தத்தைக் கைவிடவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (27.3.2025) முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:.
தீர்மானம்
இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது. ஆனால் அதற்கு மாறாக, சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995 ஆம் ஆண்டின் வக்ஃபு சட்டத்தினைத் திருத்துவதற்குக் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த முன்வடிவினை (The Waqf (Amendment) Bill, 2024) முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்தார்.
இத்தீர்மானத்திற்கு அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *