விண்வெளிக்கு அமெரிக்கா அனுப்பிய சிம்பான்சி ரஷ்யா அனுப்பிய லைக்கா நாய்

viduthalai
2 Min Read

1957ஆம் ஆண்டு பூமியிலிருந்து முதல் உயிரினத்தை விண்வெளிக்கு அனுப்பியது சோவியத் ஒன்றியம். லைக்கா என்ற பெண் நாயை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

அமெரிக்கர்கள் குரங்கு மற்றும் சிம்பான்சிகளை அனுப்ப பரிசோதித்தபோது ரஷ்யர்கள் நாய்களை விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்தனர்.

ரஷ்ய விஞ்ஞானிகள் முடிவு

அதற்கு காரணம் நாய்கள் மனிதர்களைப் போலவே பிணைப்புகளை கொண்டிருக்கும். அவைகளுக்கு பயிற்சி அளிப்பதும் எளிது என்பதால் நாய்களை அனுப்ப முடிவு செய்தனர்.

அதிலும் குறிப்பாக தெரு நாயை தேர்ந்தெடுத்தனர். அவை பிறப்பிலிருந்து வாழ்வாதாரத்திற்காக போராடும் என்பதால் விண்வெளிக்கு அவை பொருத்தமாக இருக்கும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் நம்பினர்.

மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத் தப்பட்டு விண்வெளி உடையுடன் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் தனியாக விண்வெளிக்குச் சென்றது லைக்கா. விண்வெளியில் லைக்காவின் உடலை கண்காணிக்க அதன் உடலின் முக்கிய நரம்புடன் ஒரு டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டது. சுவாசிக்க ஆக்சிஜன் வழங்கப்பட்டது. கழிவுகளை சேகரிக்க ஒரு பையும் பொருத்தப்பட்டிருந்தது, உணவும் தண்ணீரும் ஜல்லி வடிவில் வைக்கப் பட்டிருந்தது.

சோவியத் அதிபர் ஒரு மாதத்திற்குள் ஒரு நாயை விண்வெளிக்கு அனுப்ப உத்தரவிட்டதை தொடர்ந்து, குறித்த நேரத்திற்குள் அனுப்ப வேண்டும் என்ற அவசரத்தில், லைக்காவை எப்படி உயிருடன் பூமிக்கு திரும்பி கொண்டு வர வேண்டும் என்று யாரும் யோசிக்கவில்லை.
எதிர்பார்த்தபடி விண்கலம் பூமியின் சுற்றுப் பாதையில் நுழைந்தது. நாசா கூற்றுப்படி, ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் சுமார் 10 நாள்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டது. ஆனாலும் ஒரு வாரத்தில் லைக்கா விண்கலத்தில் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
லைக்கா விண்வெளியில் ஏழு மணி நேரம் மட்டுமே உயிர் வாழ்ந்ததாகவும், பயம் மற்றும் வெப்பம் காரணமாக இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அஞ்சல் தலைகள்

விண்வெளிக்கு அனுப்பப்பட்ட லைக்கா ஒரு தேசிய வீராங்கனையாக மாறியது. லைக்காவின் நினைவாக சிறப்பு அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சலுறைகள் வெளியிடப்பட்டன. அந்தக் காலத்தில் லைக்கா என்ற பெயர் பிரபலமாக இருந்திருக்கிறது. விண்வெளிக்கு சென்ற முதல் நட்சத்திரம் என்ற அடையாளத்தை லைக்கா பெற்றது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *