சனிக்கோளின் தனித்துவமான அதன் வளையம் மறைந்து போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக சனிக்கோள் அதன் வளையத்தை இழந்துவிட்டது என நினைக்க வேண்டாம். அடுத்த சில மாதங்களுக்கு சனிக்கோளின் வளையம் பூமியில் இருந்து தென்படாது. நவம்பர் மாதம் வரை இதே நிலை இருக்கும் எனவும், அதன் பிறகே சனிக்கோளின் வளையம் மீண்டும் தென்பட தொடங்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சூரிய குடும்பத்தில் ஆறாவதாக உள்ள கோள் சனி. இந்த கோளினை சுற்றிலும் வளையம் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. சனிக்கோள் என்றதுமே அதன் வளையம் தான் நினைவிற்கு வரும். சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்தபடியாக பெரிய கோளாக சனிக் கோள்தான் உள்ளது. சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க இந்த கோளானது 29.5 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.
சனிக் கோளின் வளையம் மறைகிறது
சனிக்கோளில் உள்ள இந்த வளையங்கள் சனியின் பூமத்திய ரேகைக்கு மேல் சுமார் 6630 கி.மீட்டரிலிருந்து 1,20,700 கி.மீ வரை உள்ளது. சனியின் அழிந்த நிலவின் எஞ்சிய பாகங்களே இந்த வளையங்கள் என்ற ஒரு கூற்றும் உள்ளது. 93 சதவிகிதம் நீர் மற்றும் பனியை கொண்டதாக இந்த வளையம் உள்ளது. சனிக்கோளின் இந்த வளையம் பூமியின் பார்வையில் இருந்து தற்காலிகமாக மறைய உள்ளது. அதாவது, வளையத்தின் தடிமனான வளையங்கள் பூமியை நோக்கி வருவதால் அதன் வளையங்கள் பார்வையில் இருந்து மறைவது போல தெரிகிறது.
இந்த அரிய நிகழ்வு ஒவ்வொரு 13 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதற்கு முன்பாக இந்த அரிய வானியல் நிகழ்வு 2009 ஆம் ஆண்டு நடைபெற்றது. பூமியை போல சனியின் அச்சும் 26.73 டிகிரி கோணம் சரிந்துள்ளது. பூமியின் ஒப்பிடுகையில், சனியின் சாய்வுக் கோணம் சற்று மாறுகிறது. இதன் காரணமாக, இந்த கோளை பூமி கடக்கும் போது அதன் வளையம் பார்வையில் தென்படாத நிலை உள்ளது.
பூமியுடன் ஒப்பிடும்போது சனியின் சாய்வு மாறுகிறது. இதனால் நமது பூமிக் கோள் அதன் தளத்தைக் கடக்கும்போது அதன் வளையங்கள் நமது பார்வையில் இருந்து மறைந்துவிடும். சனிக்கோள் பூமியை நோக்கி சாய்ந்து இருக்கும் போது, வளையத்தின் மேற்பகுதியை நம்மால் காண முடியும். அதேபோல, பூமியை நோக்கி சாய்வாக வரும் போது வளையத்தின் கீழ்பகுதியை காண முடியும். இந்த இரண்டு கால கட்டங்களுக்கு இடையே வரும் போது வளையமானது பார்வையில் இருந்து மறைகிறது.
இந்த அரிய நிகழ்வுதான் தற்போது நடைபெற உள்ளது. சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம், சனிக்கோளின் நடுவில் உள்ள கடினமான மெல்லிய கோடு போன்ற வளையம் சுற்றி வருவதை காண முடியும். அடுத்த சில மாதங்களுக்கு சனிக்கோளின் வளையத்தை முழு அளவில் காண முடியாது என்றும் நவம்பர் மாதத்திற்கு பிறகே இதனைக்காண முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த நாடுகளில் எல்லாம் பார்க்க முடியும்
மத்திய தெற்கு அட்சரேகை பகுதிகளில் இருந்து வளையம் இல்லாத சனிக்கோளை வானியல் ஆர்வலர்கள் காண முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது, அர்ஜெண்டினா, சிலி, தென் ஆப்பிரிக்கா, மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் சில பகுதிகளில் இருந்து பார்த்தால் இது தென்படும்.
சனியில் உள்ள வளையம் சூரிய குடும்பம் எப்படி உருவானது என்பதை கண்டுபிடிக்க மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பனிக்கட்டிகள், பாறை துகள்கள் உள்ளிட்டவைகளால் ஆன இந்த வளையம் சனியின் ஈர்ப்பு விசையினால் இந்த வளையம் அதனை சுற்றி காணப்படுகிறது. விண் குப்பைகள் கற்கள் ஆகியவையிலும் இருந்து சனிக்கோளை பாதுகாக்கும் விதமாக இது அமைந்துள்ளது