குடந்தை, மார்ச் 27- தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் புலத் தலைவர் பேராசிரியர் உ.பிரபாகரன் எழுதிய பெரியார் ஈ.வெ.ராவின் கல்விச் சிந்தனைகள், தந்தை பெரியாரின் மொழி-இலக்கிய சிந்தனைகள், பாவேந்தர் பாரதிதாசனின் குமுகாய சிந்தனைகள், ஆய்வாளர்கள் பார்வையில் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் தமிழ் கொடை ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் முப்பெரும் விழா 16.3 .2025 அன்று மாலை 6 மணி அளவில் கும்பகோணம் லீ கார்டனில் குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
அ.ஜெயராஜ் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் உ.பிரபாகரன் நோக்க உரை ஆற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் முனைவர் ரத்தின சபாபதி ஆகியோர் நூல்களை வெளியிட்டு உரையாற்றினர். பேராசிரியர் அரச முருக பாண்டியன் ஆடலரசன் அருள்நாயகம் ஆகியோர் நூல் மதிப்பீட்டு உரை ஆற்றினர். ஆடிட்டர் சண்முகம் மா.சேதுராமன் மற்றும் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
சுயமரியாதை வீரர் வை மு.கும்பலிங்கன் பெரியார் கொள்கையாளராக நீண்ட காலம் வாழ்ந்து வருபவர். அவருக்கு கருப்பு சட்டையினை வழக்கறிஞர் கீதாலயன் அணிவித்து பாராட்டினார்.
அரியலூர் மாவட்ட கழக காப்பாளர்சி. காமராசு, அரியலூர் மாவட்ட கழக தலைவர் விடுதலை நீலமேகம், தா.பழூர் ராஜேந்திரன், தமிழ் சேகர், குடந்தை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் நிம்மதி, ஜில்ராஜ், செல்வரசன், ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.