கழகத் துணைப் பொதுச்செயலாளர்
சே.மெ.மதிவதனி குற்றச்சாட்டு
கிள்ளியூர், மார்ச் 26 நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புமூலம் ஒன்றிய அரசு தமிழர்களின் குரல்வளையை நசுக்கப் பார்க்கிறது என்று கழகத் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஒன்றிய ஆட்சியின்மீது குற்றம் சாட்டினார்.
பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம்
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் கிள்ளி யூர் தெற்கு ஒன்றியம் சார்பில், தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் கீழ்குளம் பகுதியில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பி.கோபால் தலைமை வகித்தார். கூட்டத்தில் மேனாள் அமைச்சர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் த.மனோதங்கராஜ் மற்றும் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் செ.மெ. மதிவதனி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மதிவதனி பேசும்போது கூறியதாவது:
ஒன்றிய பிஜேபி அரசு தங்களது சாதனை களைச் சொல்லி வெற்றி பெற வாய்ப்பு இல்லாததால் மதத்தை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள் இவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லலாம். வெற்றி பெற்றவர்களுக்கு தான் பரிசு வழங்குவார்கள். ஆனால், அவுரங்கசீப் கல்லறையை உடைத்தால் பரிசு என்று அறிவித்திருக்கிறது இந்த பாசிச அரசு.
தமிழ் மொழி ஒரு மேன்மையான மொழி அது கல் தோன்றி, மண் தோன்றாத காலத்திலேயே அதற்கு முன்தோன்றியது. இன்று இங்கு வந்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் பொன்னாடை போர்த்தினார்கள். ஆனால், அன்று பெண்கள் மேலாடை கூட போடக்கூடாது என்ற சட்டம் இருந்தது. அதைத் தடுத்து ஒழித்து இன்று நாம் இந்த நிலையைப் பெற்றிருக்கிறோம். பெண்கள் தங்களுக்கு என ஒரு அடையாளத்தை கொள்ள வேண்டும் குமரி மாவட்டத்தில் தான் பெண்கள் அதிக அளவு படிப்பறிவு பெற்று இருக்கிறார்கள் பெண்களுக்கு உரிமைக்காக குரல் கொடுத்ததே திமுக தான் உள்ளாட்சித் துறை வேலைவாய்ப்பு சொத்தில் சம பங்குரிமை என பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது திமுக அரசு தான். குழந்தைகள் நலனை பாதுகாக்கும் அரசை நாம் இன்று பெற்றிருக்கிறோம்.
கல்வியை முடக்கப் பார்க்கிறது!
மூன்றாவது, அய்ந்தாவது, எட்டாவது படிக்கும் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு பொதுத் தேர்வு கொண்டு வருகிறது. இது என்ன நியாயம்? பொதுத்தேர்வு எழுதும் அளவுக்கு இவர்களுக்கு என்ன அறிவு மேம்பட்டு இருக்கும். இதைப் புரிந்து கொள்ளாத அரசு பொதுத்தேர்வைக் கொண்டு வந்து கல்வியை முடக்க பார்க்கிறது. இதில் அவர்களின் ஸநாத னக் கொள்கை தெரிகிறது. இதுதான் புதிய கல்விக் கொள்கை இதை ஏற்க மறுக்கிறது திமுக அரசு. ஆகவே தான் கல்விக்கான 2000 கோடி ரூபாய் நிதியை தர மறுக்கிறது ஒன்றிய அரசு. ஆனால், திமுக அரசோ, சொந்தமாக 46 ஆயிரம் கோடி ரூபாயை கல்விக்காக உயர்த்தி யிருக்கிறது என்றால், கல்விக்காக இந்த அரசு மேற்கொள்ளும் நம்பிக்கை புரிகிறது.
குமரிமாவட்டத்தில் அப்போது கோவி லுக்குள் ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையக்கூடாது என தடை இருந்தது. அப்போது ஒடுக்கப்பட்ட மக்களை ஜாதி ரீதியாக கொடுமைப்படுத்தியதால் தான் அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினர். இது பார்ப்பனர்கள் வைத்த திட்டம் தான். ஆக மக்களை தவறான பாதையில் கொண்டு சென்றதே இந்த பார்ப்பனீயம் தான். இப்போது இவர்கள் வேறு ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் தொகுதி மறுபரிசீலனை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
வட மாநிலங்களில் எண்ணிக்கையை கூட்டி, தென் மாநிலங்களில் எண்ணிக்கை குறைக்கிறது. இதனால் அவர்கள் பாதக திட்டங்களை நிறைவேற்றி விடலாம் என திட்டமிட்டு இருக்கிறது. ஒன்றிய அரசு தமிழர்களின் குரல்வளையை நசுக்க பார்க்கிறது ஒன்றிய அரசு. திமுக அரசு பொறுப்பேற்ற பின் நாடாளுமன்றத் தேர்தல் இடைத்தேர்தல் என பல தேர்தலை சந்தித்தது அத்தனையும் தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடி இருக்கிறது இதில் நாம் என்ன தெரிந்து கொள்கிறோம் என்றால் தமிழக மக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மீது வைத்திருக்கும் மரியாதை புரிகிறது மக்களை மேம்படுத்துவது மட்டுமே தமிழ்நாடு அரசின் திட்டம் என புரிந்து கொள்ள வேண்டும். சிறந்த கல்வி அறிவை பெற்றால் தான் நாம் முன்னேற முடியும் என்று எண்ணத்தில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அதற்கு நாம் வலு கொடுக்க வேண்டும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பங்கேற்றோர்
நிகழ்வில் பாலூர் தேவா, கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன், லீலா தங்க துரை திருமதி சரளா கோபால், வழக்குரைஞர் ஜெபா ஜான் எஸ்.எம்.கான், பேரூர் செயலாளர் சத்யராஜ், சீலா சத்யராஜ், லாசர் திரு கிருஷ்ணன், ஜான், ஷோபா. ஆலஞ்சி, மனோஜ் துரைராஜ், இளம் பேச்சாளர் சி. ஹரிணி, சிலம்பை டென்னிசன் வில்சன் வாத்தியார், மாவட்ட அவை தலைவர் மரிய சிசுகுமார், துணைச் செயலாளர் ராஜ், மருத்துவர் புஷ்பலிலா ஆல்பன், மாவட்ட கழகப் பொருளாளர் ததேயு பிரேம்குமார், தலைமைச் செயற்கு உறுப்பினர்கள் ரிமோன், மனோதங்கராஜ் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் கோமதி மணி, கிருஷ்டல்பிரேம குமாரி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் டி.பி,ராஜன், மாஸ்டர் மோகன், ஜான் பிரைட், அருளானந்தம், ஜார்ஜ், நகரச் செயலாளர் வினோத் குமார், மகளிரணி சிபித், மகளிர் தொண்டரணி விஜயராணி, பொறியாளர் அணி வீர வர்கீஸ், விவசாய அணி ஜஸ்டின் விஜயகுமார் ஆகியோர் உள்பட கழக நிர்வாகிகள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் என பல கலந்து கொண்டனர்.