இராமேசுவரம், மார்ச்26- இராமநாதபுரம் மாவட்ட கழக சார்பில் 23. 3 .2025 அன்று மாலை 6 மணிக்கு இராமேசு வரம் பேருந்து நிலையம் அருகில் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72ஆவது பிறந்த நாள் விழா எழுச்சியோடு நடை பெற்றது.
மாவட்ட கழக செயலாளர் எம் .முருகேசன் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை 95 ஆண்டுகாலம் வாழ வைத்த அன்னை மணியம்மையாருக்கு நன்றிப் பெருக்கோடு விழாவை நடத்துகிறோம் எனவும்,
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழி நின்று திராவிட மாடல் ஆட்சி புரியும் சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களை வாழ்த்தி மகிழ்வோம் என வரவேற்புரையாற்றினார்.
விழாவிற்கு தலைமை வகித்த மாவட்ட கழகத் தலைவர் கே.எம்.சிகாமணி பிஜேபியினரின் பித்தலாட்டங்களையும் மோடி தொடங்கி ஆளுநர் வரை தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகங்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவாற்றலைக் கொண்டு எதிர்ப்புகளை தூளாக்குவோம் என முழங்கினார்.
மதிமுகநகர செயலாளர் வெள்ளைச்சாமி, திமுக நகர துணைச் செயலாளர் வெங்கடேசன் மாவட்ட ப.க. தலைவர் பேரின்பம், ஆகியோர் உரையாற்றினார்கள்.
தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சிக்கு எதிரான தடைக்கல் என்ற தலைப்பில் கழக மாநில கிராமபிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர். அதிரடி .க. அன்பழகனின் நடுவ ராகக் கொண்டு தொடங்கியது
உரிமை பறிப்பு என்ற தலைப்பில் இரா பெரியார் செல்வன் இந்தித் திணிப்பு என்ற தலைப்பில் இராம. அன்பழகன் நிதி மறுப்பு என்ற தலைப்பில் ஆரூர்.தே.நர்மதா ஆகியோர் சிறப்பாக வாதிட்டார்கள். நிறைவாக தீர்ப்பு வழங்கிய முனைவர் அதிரடி.க. அன்பழகன் ஜாதி, மதம், மூடநம்பிக்கைகள் எனும் மூளையில் போடப்பட்ட விலங்கினை அகற்றி, ஒன்றிய மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்தி, சமஸ்கிருத திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை, ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் தூக்குக் கயிற்றினை அறுத்தெறிவோம் என தீர்ப்பு வழங்கினார். அனைத்து பெரு மக்களும் கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர். நிறை வாக நகர கழகத் தலைவர் ம.எட்வர்டு நன்றி கூறினார்.
நிகழ்வில் மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திமுக அவை தலைவர் எம்.எம்.கருப்பையா, மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் எம் சையது இம்ரம்சா, பொதுக்குழு உறுப்பினர் கிருட்டிணவேணிதங்கச்சிமடம் நகர கழக செயலாளர் குழந்தை ராயர், தங்கச்சிமடம் ப.க. பொறுப்பாளர் முஸ்தபா இராமேஸ்வரம் நகர கழக செயலாளர் சி.அறிவுச்செல்வன் அ.மஞ்சு உள்ளிட்டோர் பங் கேற்று சிறப்பித்தார்கள்.