*டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2026 ஜனவரி பருவத்திற்கான 8ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடந்து வருகிறது. மார்ச் 31ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்ப படிவங்களை ‘தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை 600 003’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
* நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியைப் பின்பற்ற வேண்டும் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மெக்வாலிடம் தொல்.திருமாவளவன் கோரிக்கை அளித்து வலியுறுத்தினார். 2018 முதல் நியமிக்கப்பட்ட 715 உயர்நீதிமன்ற நீதிபதிகளில், SC-22, ST-16, OBC-89, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 37 பேர் மட்டுமே உள்ளதாகவும், இந்த அப்பட்டமான புறக்கணிப்பு பன்முகத் தன்மைக்கு சவாலாக உள்ளதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.