கேள்வி: ‘தலையின் இழிந்த…’ என்ற குறளுக்கு அதிகப் பொருத்தமானவர் சு.கி.சிவமா, டி.எம்.கிருஷ்ணாவா, கமல்ஹாசனா?
பதில்: அதில் மூவருக்கு இடையேயும் கடும் போட்டி இருப்பதால், அந்தக் குறளுக்கு யார் பொருத்தம் என்று என்னால் கூற முடியாது.
(‘துக்ளக்‘, 2.4.2025, பக்கம் 7)
பதிலடி
‘‘தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை’’ (குறள் 964)
உயர்ந்த குடியில் பிறந்த மக்களாயினும், உயர்ந்த நிலையை விட்டுத் தாழ்ந்தபோது, தலையை விட்டு, நீங்கி வீழ்ந்த மயிரினை ஒப்பர் என்பது இதன் பொருள்.
பார்ப்பனீயத்தின் சிண்டைக் குலுக்கிப் புரட்டைக் கிழித்தவர்கள் (அவர்கள் பார்ப்பனர்களாக இருந்தாலும்) குருமூர்த்தி வகைய றாக்களுக்குத் தலையிலிருந்து விழுந்த மயிருக்குச் சமம். இதற்கெல்லாம் மட்டும் திருக்குறளை வசதிக்கேற்ப இழுத்துக் குளிர்காய்வார்கள்.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இது பொருந்தாவிட்டாலும், கொலை வழக்கில் சிக்கி ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலைந்த சங்கராச்சாரியாருக்குத்தான் மிகவும் பொருந்தும். ஒரு மனிதனை மனிதனாகப் பார்க்காமல், ‘தீண்டாமை ஷேமகரமானது’ என்று மற்றொரு மனிதனை இழிவுபடுத்தும், குருமூர்த்திக் கும்பல் பார்வை யில் மகாபெரியவாளான சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்குத்தான் மிக மிகப் பொருந்தும்.