பழமொழிதான் நினைவுக்கு வருகிறது
* டில்லிக்கு நான் சென்றது கூட்டணிபற்றி பேசுவதற்காக அல்ல. அ.தி.மு.க.வின் புதிய அலுவலகத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காகத்தான்.
– எடப்பாடி பழனிசாமி
>> தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்? என்று கேட்டால், ‘புல் புடுங்கத்தான்’ என்று சொன்ன பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
என்ன ஆச்சு?
* தி.மு.க.வை அகற்ற விரும்புவோர், கூட்டணியில் இணையலாம். – அண்ணாமலை, பி.ஜே.பி.
>> கழகங்கள் இல்லாத ஆட்சிப் பேச்சு என்ன ஆச்சு?
ஏழை நாடு?
* ரூ.5,258 கோடியில் திருப்பதி தேவஸ்தான பட்ஜெட்.
>> அய்யோ பாவம், இது ஏழை நாடு!