TN Pink Auto Scheme Jobs 2025: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” திட்டத்தின் கீழ் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 06.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு:யார் யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் “இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்” திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு சென்னை மாநகரில் 250 பிங்க் CNG ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் முதல்கட்டமாக பெறப்பட்டன. அதிலிருந்து தகுதியான பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பன்னாட்டு மகளிர் நாளான 08.03.2025 அன்று பிங்க் ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக சி.என்.ஜி ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளன.
TN Pink Auto Scheme Jobs 2025
காலியிடங்கள்: பல்வேறு பணி ஓட்டுநர் (பெண்)
வயது வரம்பு: 20 – 45
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் மூலம்
கடைசி தேதி: 06.04.2025
பணியிடம்: சென்னை
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: பெண்களின் பாதுகாப்பிற்காக GPS கருவி மற்றும் காவல் துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட வசதி.
“ஊர் கேப்ஸ்” செயலியில் கட்டணமின்றி ஆட்டோக்களை இயக்கும் வாய்ப்பு.
பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சுயதொழில் வாய்ப்பு.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:
பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சென்னையில் குடியிருக்க வேண்டும்.
TN Pink Auto Scheme Jobs 2025
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான பெண் ஓட்டுநர்கள்தங்கள் சுய விவரங்கள் அடங்கிய மாதிரி விண்ணப்ப படிவம்/Resume உடன் சேர்த்து கல்வி சான்றிதழ்கள் அடங்கிய விவரங்களை இணைத்து 06.04.2025 தேதிக்குள் அஞ்சல் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு/தெற்கு) சிங்காரவேலர் மாளிகை, 8ஆவது தளம் சென்னை – 600 001
எனவே, ஆட்டோ ஓட்ட விரும்பும் பெண் ஓட்டுநர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.