திருவாரூர், ஜூலை 8 – திருவாரூர் ரோட்டரி சங்கக் கட்டடத்தில் இன்று (8.7.2023) காலை 9:30 மணிக்கு பெரியார் பயிற்சிப் பட்டறை தொடங்கியது.
திருவாரூர் நகர தலைவர் எஸ்.வி.சுரேஷ் வரவேற்பு உரை யாற்றினார். மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமை உரையாற்றி னார். மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசன், கழக காப்பாளர் கி.முருகையன், மாநில விவசாய அணி செயலாளர் க.வீரையன், மாநில ஆசிரியர் அணி அமைப் பாளர் இரா.சிவக்குமார், மாநில இளைஞர் அணி துணை அமைப் பாளர் நாத்திக பொன்முடி, நகர அமைப்பாளர் கே.சிவராமன் ஆகி யோர் முன்னிலை வகித்து உரை யாற்றினர். தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தொடக்க உரையாற்றினார்.
பெரியாரியல் பயிற்சிப் பட் டறை பொறுப்பாளர் மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து உரையாற்றினார்.
நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, மேனாள் மண்டல செயலா ளர் க.முனியாண்டி, நகர செயலா ளர் ப.ஆறுமுகம், திருத்துறைப் பூண்டி நகர செயலாளர் நாகரா சன், மகளிர் பாசறை செந்தமிழ்ச் செல்வி, திருத்துறைப்பூண்டி ஒன் றிய செயலாளர் சு.பொன்முடி, திருவாரூர் ஒன்றிய துணைத் தலை வர் இராசேந்திரன், திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் கோ.இராமலிங்கம், வி.தொ.அணி செயலாளர் இரத்தினசாமி, மாவட்ட ப.க. தலைவர் அரங்க ஈவேரா, ஓவியர் நன்னிலம் சங்கர், நாகை மாவட்டத் துணைத் தலை வர் பா.வா.ஜெயக்குமார், சிவானந் தம், நன்னிலம் புலவர் ஆறுமுகம், பருத்தியூர் மு.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பயிற்சி வகுப்பில் இருபால் மாண வர்கள் 90 பேர் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.
‘கடவுள் மறுப்பு தத்துவ விளக்கம்’ எனும் தலைப்பில் வழக்குரைஞர் பூவை.புலிகேசியும், ‘தந்தை பெரியார் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் முனைவர் துரை.சந்திர சேகரனும், சமூக ஊடகங்களில் நமது பங்கு எனும் தலைப்பில் மா.அழகிரிசாமி, வி.சி.வில்வமும், மதிய உணவு இடைவேளைக்குப் பின் ‘தந்தை பெரியாரின் பெண் ணுரிமைச் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரும் (அவரே, தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி எனும் தலைப்பிலும்) பயிற்சி வகுப்பு எடுத்து சிறப்பித்தனர்.