உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜை சேர்ந்தவர் சுவாமி அரி ஓம் தாஸ்.
கும்பமேளாவில் கோடிக்கணக்கானோர் குளித்த தால் தீட்டுப்பட்ட கங்கையை புனிதப்படுத்த அரியானாவின் குருஷேத்ராவில் கடந்த 18-ஆம் தேதி சிறப்பு யாகத்தை தொடங்கினார். இது 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த யாகத்தில் நாடு முழுவதிலுமிருந்து 1,008 பார்ப்பனர்கள் பங்கேற்று யாகம் நடத்தினர்.
இந்த நிலையில் யாகம் செய்த பார்ப்பனர்களுக்கு தரப்படும் உணவே யாகத்தை காணவந்த பிரமுகர் களுக்கும் இதர பொதுமக்களுக்கும் வழக்கப்பட்டது.
இதுதொடர்பாக அர்ச்சகர்கள் புனிதமான பணி செய்யும் எங்களுக்கு தரும் உணவை பிறருக்கு எப்படி பகிரலாம் என்று கூறி, சுவாமி ஹரி ஓம் தாஸின் பாதுகாவலர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாவலர்கள் உங்களுக்குத் தந்தது போக மீதமுள்ள உணவை பிரசாதமாக தந்தோம். நீங்கள் சாப்பிடும் முன் நாங்கள் அதில் கை கூட வைப்பதில்லை என்று கூறினர்.
ஆனால் பார்ப்பனர்கள் அவர்களின் பேச்சை ஏற்றுக்கொள்ளாமல் ரகளையில் இறங்கினர்.
இந்த நிலையில் ரகளையில் இறங்கிய பார்ப்பனர்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர்கள் யாகம் நடைபெற்ற பகுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள், கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டன. நிகழ்விடத்திற்குக் காவல் துறையினர் விரைந்து வந்தனர். தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
ஆனால் அர்ச்சகர்கள் யாகம் நடக்கும் பகுதிக்குள் ஓடிச்சென்று அனைத்தையும் உடைத்து வீசத் துவங்கினர். மேலும் யாகத்தில் இருந்த செங்கல் உள்ளிட்ட பொருட்களையும் எடுத்து வீசத்துவங்கினர்.
இதனால் அரி ஓம் தாஸின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்
இதில் ஓர் அர்ச்சகர் படுகாயம் அடைந்தார். சுமார் 25-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் காயம் அடைந்தனர். அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சகர் பிரசாந்த் கூறும்போது, “எங்களுக்கு தரமான உணவு வகைகள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டபோது பாதுகாவலர்கள் எங்களை தாக்கினர்.
6 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஓர் அர்ச்சகரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். யாகத்தை நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அரி ஓம் தாஸ் கூறும்போது, “எங்களது யாகத்தை சீர்குலைக்க சிலர் சதி செய்து மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளனர். யார் துப்பாக்கியால் சுட்டனர் என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். காவல்துறை விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்” என்று தெரிவித்தார்.
காவல்துறையினர் கூறும்போது, “யாகத்தில் பங்கேற்ற அர்ச்சகர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக குழப்பமான சூழல் நீடித்தது. காவல்துறையினரின் அதிதீவிர நடவடிக்கைகளால் இயல்பு நிலை திரும்பியிருக்கிறது. சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தனர்.
கும்பமேளாவில் அனைத்து ஜாதிமக்களும் கங்கையில் குளிப்பதால் கங்கை தீட்டு ஆகிவிடுமாம். கும்பமேளா என்பதே தீட்டை பாவத்தைக் கழிப்பதற்குத்தானே! அப்படி பாவம் கழிக்கப்பட்ட கங்கை நீர் தீட்டாகி விடுகிறதாம். இந்த தீட்டை கழிக்க ஒவ்வொரு கும்பமேளா முடிந்ததும் மகாபாரதப் போர் நடந்த இடமாக அவர்களால் சொல்லப்படும் குருசேத்திரா (அரியானா) என்ற ஊரில் தருமனின் ஆலோசனைப் படி தேவர்கள் யாகம் நடத்தினர்.
அதனையே பல நூறு ஆண்டுகளாக ஒவ்ெவாரு கும்பமேளா முடிந்த பிறகும் 40 நாட்கள் ஆயிரக் கணக்கான பார்ப்பனர்களை வரவழைத்து யாகம் நடத்துவார்கள்.
இந்த யாகத்தின் மூலம் பிற ஜாதிமக்கள் குளித்த தால் தீட்டான கங்கை புனிதமாகிவிடுவதாக கருது கின்றனர்.
குளிப்பதற்கு முன்பும் யாகம் – குளித்த பின்பும் யாகம்!
கும்பமேளா என்பதே ஒரு சுரண்டல்!
ஆயிரக்கணக்கான புரோகிதப் பார்ப்பனர்களுக்குக் கொள்ளையோ, கொள்ளை!
பக்தர்கள் பாவம் கழித்த பிறகு கங்கை நீர் தீட்டா கிறதாம், அந்தத் தீட்டைக் கழிப்பதற்காக வென்று 40 நாட்களுக்கு ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை வரவழைத்து யாகமாம்.
எல்லாம் பார்ப்பனக் கொள்ளைதானே – அவர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டத்தானே!
எதுவாக இருந்தாலும் பார்ப்பனர்களுக்கு கொள்ளை லாப கணக்கே!
பக்தி வந்தால் புத்தி போகிறது – தந்தை பெரி யாரின் கருத்தை பக்தர்கள் சிந்திக்க வேண்டும்.