சென்னை, மார்ச் 25- 14 வயதுடைய இளம் சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோயைத் தடுப்பதற்கு தடுப்பூசி போடப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
இதய நோய்
இந்த அரசு அமைவதற்கு முன்புவரை, இதய பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவ மனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு சென்றுதான் மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை இருந்தது. எனவே, மாரடைப்பு, இதய நோய்கள் வருகிறவர்களுக்கு அவரவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே மருத்துவ வசதியை அளித்திட வேண்டும் என்ற முதலமைச்சரின் உயர்ந்த இலட்சிய நோக்கத்தின் விளைவாக தமிழ்நாட்டிலிருக்கிற துணை சுகாதார நிலையங்கள் 8,713-லும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2,286-லும் loading doses என்று சொல்லக்கூடிய 14 மாத்திரைகள் aspirin, clopidogrel, atorvastatin என்கின்ற இந்த 3 வகையான 14 மாத்திரைகள் உடனடியாக வழங்கி உயிர் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் இதுவரை 15,886 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள், உயிர் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
மேலும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தடுப்பூசி
முதலமைச்சர் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். 14 வயதுடைய இளம் சிறுமி களுக்கு கருப்பைவாய் புற்றுநோயைத் தடுப்பதற்கு, கண்டறிவதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இன்றைக்கு HPV என்கின்ற தடுப்பூசி ரூ.37 கோடி செலவில் போடப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற வருவாய் மாவட்டங்களில் வாய் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்று அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறிவதற்குரிய முழு பரிசோதனைகளையும் இன்னும் 10 நாட்களில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாகத் தொடங்கப்படவிருக்கிறது. அப்படிப்பட்ட நேரத்தில் கிருஷ்ண கிரியிலும் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது என்பதையும் தங்களின் வாயிலாக மன்ற உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசினார்.
14 வயதுடைய இளம் சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கு தடுப்பூசி போடப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Leave a Comment