ஈரோடு, ஜூலை 8 – தேனி நாடாளுமனறஉறுப்பினைர் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமனறம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்நிலையில், அங்கு அவரை எதிர்த்து போட்டியிட்டு 2ஆம் இடம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வெ.கி.ச.இளங் கோவன் ஈரோட்டில் அளித்தபேட்டி வருமாறு:
தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக ரவீந்திர நாத் வெற்றி பெற்றது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. நாட்டில் தர்மமும், நியாயமும் இன்னும் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தின் போது பல முறைகேடுகள் நடந்தன. முறை கேடுகளை எல்லாம் அப் போதைய தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
ஆனால், நாங்கள் கொடுத்த புகார் மீது எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல். முழுக்க முழுக்க ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் தேர்தலில் எனக்கு தோல்வியாக அமைந்தது. காலம் தாழ்த்திதர்மமும், நீதியும் வென்றுள்ளது. வழக்கு தொடர்ந் தவருக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஈ.வெ.கி.ச. இளங்கோவன் கூறினார்.