ஆச்சாரியார், ‘இந்தி புகுத்துவதால் தமிழ் கெடாது’ என்று, மனதறிந்த பித்தலாட்டம் பேசுகிறார். இன்று தமிழ் எங்கே இருக்கிறது? தமிழ்ப் பழக்க வழக்கம், சுதந்திரம், மானம் ஆகியவைகளை உணர்த்தும் தமிழ் வார்த்தைகள் எங்கே? ஒரு தமிழ் மகன் தன் மகளுக்கோ, மகனுக்கோ கலியாணம் செய்ய வேண்டுமானால் தமிழ்ச் சொல் எங்கே? தமிழ்க் கருத்தினால் – ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்பான். ஆனால், ஆரியக் கருத்தில் பேசும்போது ‘கல்யாணம்’. ‘விவாகம்’. ‘கன்னிகாதானம்’ என்கிறான். வார்த்தை வரும்போது கருத்தும் மாறிவிடுகிறது. இதற்குத் தகுந்தபடி […]