மக்களுடைய பெயரைக்கேட்ட மாத்தி ரத்திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரி யில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட்சியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால், அவ்வித்தியாசங் காட்டும் பெயர்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது, யாவராலும் ஒப்புக் கொள்ளப் படத்தக்கதேயாகும்.
‘குடிஅரசு’ 24.2.1929