தேர்தல் ஆணையம் ஒரு தோல்வியடைந்த நிறுவனம் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் விமர்சித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் கடமைகளுக்கு ஏற்ப அதன் செயல்பாடுகள் இல்லை எனவும், நாட்டின் பெருவாரியான மக்கள் அதன் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டி யுள்ளார். போலி வாக்காளர் சேர்ப்பு விவகாரத்தில் தேர்தல் ஆணை யத்தின் நடவடிக்கை ஏற்க முடியாதது எனவும் அவர் சாடியுள்ளார்.
பா.ஜ.க. போராட்டத்துக்கு ஆதரவில்லை
கூட்டணியில் எதிர்ப்புக் குரல்!
கருநாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியான பாஜக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி, இந்த விவகாரத்தில் பாஜகவிற்கு ஆதரவில்லை என தெரிவித்துள்ளார்.