லக்னோ, மார்ச் 24 தென்மாநிலங்கள் ஒன்றிய அரசின் முன்மொழியப்பட்ட எல்லை மறுவரையறை நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும் நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் இந்த விவகாரத்தில் ‘தமிழ்நாடு மக்களுடன் இருப்பதாக’ கூறியுள்ளார், அதேசமயம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வும் இப்பிரச்சினையில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளிலும் தலையீடு!
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி களுக்கான எல்லை மறுவரையறை நட வடிக்கை குறித்து தமிழ்நாடு அரசின் நிலைபாடு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அகிலேஷ், ‘‘நான் தமிழ்நாடு மக்களுடன் இருக்கிறேன்; ஏனென்றால், பாரதீய ஜனதா கட்சி எல்லை மறுவரை யறையை நேர்மையான முறையில் செய்யு மென்று தெரியவில்லை. இவர்களால் உள்ளூர் ஊராட்சி மன்றத் தேர்தலையே ஒழுங்காக நடத்தமுடியவில்லை.
பல குழப்பத்தை ஏற்படுத்தும் அளவிற்கு…
சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதில் கூட பல குழப்பத்தை ஏற்படுத்தும் அளவிற்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் இவர்களின் தலையீடு உள்ளது’’ என்றார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அகிலேஷ். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விவாதிக்க தமிழ்நாடு செல்வீர்களா? என்ற கேள்விக்கு, ‘‘முதலில் ஒன்றிய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, பின்னர் ஜாதிவாரி கணக்கெடுப்பை முடிக்க வேண்டும்’’ என்றார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை நசுக்குவதே இவர்களின் நோக்கம்: ஹேமந்த் சோரன் இதேபோன்று அண்டை மாநிலமான ஜார்க்கண்டில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜெஎம்எம்) தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மக்களவைத் தொகுதி, எல்லை மறுவரையறை விவகாரம் குறித்து முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய கூட்டத்தை வரவேற்று பேசிய அவர் ‘‘மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே எல்லை மறுவரையறையை வரையறுப்பது நியாயமாகவும் சமமாகவும் இருக்க முடியாது’’ என்று ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கூறினார்.
எல்லை மறுவரையறை குறித்து கவலை தெரிவித்த சோரன், மாநிலத்தில் பழங்குடியினர் தொகுதிகளின் எண்ணிக்கை யைக் குறைக்க முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி, அதன் ஒத்தி வைப்புக்கு வழிவகுத்ததாகவும் கூறினார். தற்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் எழும்பாவண்ணம் சூழ்ச்சி செய்வதே அவர்களின் நோக்கம் இதை அனைவரும் எதிர்த்துநிற்கவேண்டும் என்று தெரிவித்தார்.