தருமபுரி. ஜூலை 8- தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் , இரண்டு இலவச தாய்சேய் வாக னத்தை மருத்துவர் டிஎன்விஎஸ்.செந்திலகுமார். எம்.பி. துவக்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பென்னா கரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, மற்றும் பென்னா கரம் அரூர் பாலக்கோடு பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனைகளில், பிரசவித்த தாய் மார்களை இலவசமாக வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவதற்கு ஏதுவாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம் – 2022 – 2023ஆம் ஆண்டு நிதியில் இருந்து இரண்டு தாய்செய் ஊர்தி வாங்க, தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ் செந்தில் குமார் நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதன் அடிப்படையில் ஏசி வச தியுடன் கூடிய இரண்டு டெம்போ டிராவலர் தாய்சேய் வாகனத்தை பயன்பாட்டிற்காக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத் துவர் டிஎன்விஎஸ் செந்தில் குமார் துவக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி மருத் துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் அமுதவள்ளி ஊரக சுகாதார நலப் பணிகள், இணை இயக்குநர் மருத் துவர் சாந்தி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் ஜெயந்தி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங் கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.