அய்தராபாத், ஜூலை 8- மேற்குவங்காளத்தின் ஹவுரா நகரில் இருந்து தெலங்கானா வின் செகந்திராபாத் வரை செல்லும் பலக்னுமா விரைவு ரயில் காலை அய்த ராபாத் அருகே சென்று கொண்டி ருந்தது.
அங்குள்ள பகிடிப்பள்ளி மற்றும் பொம்மைப்பள்ளி ரயில் நிலையங் களுக்கு இடையே சென்று கொண்டி ருந்தபோது ரயிலின் 2 பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. ஓடும் ரயிலில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. இதையடுத்து ரயில் உடனடி யாக நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து தீப்பிடித்த ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியபடி கீழே இறங்கி ஓடினர். இதற்கிடையில் 2 ரயில் பெட் டிகளிலும் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்ததால் அங்கு கரும் புகை மண்டலம் எழுந்தது. தீயணைப்பு வீரர் கள் சம்பவ இடத்துக்கு வர தாமதமா னதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் மேலும் 2 பெட்டிகளுக்கு தீ பரவியது. இதனிடையே விபத்து குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் தீப்பிடித்த ரயில் பெட்டிகளில் இருந்து பாதிக்கப்படாத ரயில் பெட்டிகளை பிரித்தனர். இதன் மூலம் மேலும் பல ரயில் பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து விபத்து நடைபெற்ற இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத் தனர்.
எனினும் 2 ரயில் பெட்டியில் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. உரிய நேரத்தில் தீ விபத்து கண்டறியப்பட்டு பயணிகள் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ரயிலில் எப்படி தீப்பிடித்தது என்பது உடனடி யாக தெரியாத நிலையில் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த னர்.
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தின் சோக வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில் அய்தராபாத்தில் ஓடும் ரயிலில் தீப்பிடித்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற் படுத்தி உள்ளது.