கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
8.7.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* வாரங்கல் நகரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் புறக்கணிக்க முடிவு. மாநிலத்திற்கு எந்தத் திட்டத்தை யும் நிறைவேற்றாமல் ஒன்றிய அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு.
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* அவதூறு வழக்கில் தண்டனையை குஜராத் நீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய ராகுல் சார்பில் காங்கிரஸ் முடிவு.
* கோயில்கள் தொடர்பான 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்த ரங்கராஜன் நரசிம்மன் என்ற மனுதாரரை, தான் தொடர்ந்த வழக்குகளின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு ரூ.50,000 வீதம் ரூ.3.5 லட்சம் டெபாசிட் செய்ய சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு.
* அதிமுக மேனாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை ஆளுநர் பெற்றுக் கொண்ட விவரங்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ‘இன்று மணிப்பூர் என்றால், நாளை கேரளாவாக இருக்கும்’ என்று வடகிழக்கு மாநில வன்முறைகள் குறித்து கத்தோலிக்க பிஷப் கவலை. வடகிழக்கு மாநிலத் தில் நடந்து வரும் வன்முறை “நுணுக்கமாக திட்டமிடப் பட்டது” என்றும் குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்
* “ரஷ்ய அதிபருடன் உக்ரைன் போரைப் பற்றி விவாதிக்க நேரம் தேடும் பிரதமர், சில மாதங்களுக்குப் பிறகும் தனது சொந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தில் போர் போன்ற சூழல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன் – என்பது அவரது விமர்சகர்களிடம் இருந்து எழும் கேள்வி அல்ல. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எழுப்பும் கேள்வி,” என்று கேரளாவில் இருந்து வெளிவரும் சர்ச் ஆர்கன் தனது சமீபத்திய இதழின் தலையங்கத்தில் கூறியுள்ளது.
– குடந்தை கருணா