பள்ளி மாணவர்களுக்கு கட்டாயமாகும் பாலியல் கல்வி!
பாலியல் குற்றங்களைத் தடுக்க, பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வியை கற்றுக் கொடுப்பதுதான் தீர்வு என்பது பலரது கருத்து. இந்த கருத்துக்கு செவி சாய்த்திருக்கிறது கருநாடக அரசு. அம்மாநில பள்ளிகளில் 8 -– 12 வரையிலான வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மருத்துவர்கள் தலைமையில் கட்டாய பாலியல் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று (மார்ச் 22) உயர்ந்துள்ளது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கு விற்பனையான நிலையில், நேற்று 0.13 காசுகள் உயர்ந்து ரூ.100.93க்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 0.13 காசுகள் உயர்ந்து ரூ.92.52க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். உங்கள் ஊரில் பெட்ரோல் விலை என்ன?
தொழில் முனைவோர்களுக்கான மேம்பாட்டுப் பயிற்சி
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாள்கள் பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சியை வரும் 26.3.2025 முதல் 28.3.2025 தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர் (ஆண் / பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆவது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in<http://www.editn.in> என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல்
புதுப்பிப்பதற்கான ஆலோசனை
ஒரு வாக்காளர் அவருக்கென ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும். வேறு எங்கும் வாக்களிக்க முடியாது. நாடு முழுவதும் போலி வாக்காளர்களை நீக்கவும், பல தசாப்தங்களாக நிலவும் பிரச்சினையை மூன்று மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வரவும் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.
மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உள்பட கிட்டத்தட்ட 5,000 தேர்தல் அதிகாரிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் அரசியல் கட்சிகளுடன் கூட்டங்களை நடத்துவார்கள். வாக்காளர் பட்டியல் – ஆதார் இணைப்பு குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் தேர்தல் ஆணைய நிபுணர்களுக்கு இடையேயான ஆலோசனைகள் விரைவில் தொடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின்
சூரிய சக்தி நிறுவல் பயிற்சி
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் 15 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் சூரிய சக்தி நிறுவல் பயிற்சியை வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.
இப்பயிற்சியில் சூரிய சக்தி தொழில் மற்றும் சந்தை போக்குகள் பற்றிய கண்ணோட்டம், சூரிய சக்தி அடிப்படைகள் அறிமுகம், சூரிய சக்தி அமைப்புகளின் கூறுகள், வணிகங்களுக்கான சந்தைப்படுத்தல் உத்திகள், பிராண்டிங் மற்றும் விளம்பர நுட்பங்கள் போன்றவை கற்றுத் தரப்படும். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in<http://www.editn.in> என்ற வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.