காவேரிப்பட்டணம், மார்ச் 23- கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட் டணம் பெரியார் சிலை அமைக்க முதன்முதலில் நன்கொடை வழங்கி தொடங்கிவைத்த சீரிய பெரியார் பற்றாளர் தனது இறுதி மூச்சு இருக்கும்வரை தொடர் விடுதலை வாசகருமான மறைந்த பிரபல தொழிலா திபருமான கே.வி.எஸ்.சண்முகம் அவர்களின் வாழ்விணையரும், திமுக வர்த்தகரணி மாநில துணைச் செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன், காங்கிரஸ் பிரமுகர் தொழிலதிபர் கே.வி.எஸ்.தணிகாசலம்.கே.வி.எஸ். திருநாவுக்கரசு ஆகியோரின் தாயாருமான இராஜம்மாள் அம்மையார் அவர்கள் 22/03/2025 அன்று அதிகாலை 2.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அன்னாரது மறைவு செய்தி அறிந்து கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் தி.கதிரவன், மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், பெ.செல்வேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மேனாள் ஒன்றிய அமைப்பாளர் சி.இராசா உள்ளிட்ட பொறுப்பாளர்களும் தோழர்களும் கலந்துக்கொண்டு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.