கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தக்கலை ஒன்றியம் முளகுமூடு பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள் கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் தோழர் கலைச் செல்வன், மற்றும் பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். திராவிடர்கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.