அவதாரங்கள் அழிவு வேலைக்கே!

viduthalai
1 Min Read

கடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லம் தெரியுமா?
அவதாரங்கள் எல்லாம் அழிவு வேலைக்கே தோன்றியவை என்பது முதலாவது உணரப்பட வேண்டும்!

திராவிடர்களை ஒழிக்க: அவையாவும் ஆரியத்தை எதிர்த்து நின்ற திராவிடர்களை ஒழிக்கவே எதிர்ப்பு சக்திகளை ஒழிக்கவே தோன்றியவை! அல்லது தோற்று விக்கப்பட்டவை – அல்லது வேண்டுமென்றே கற்பனை செய்யப்பட்டைவை என்பது இரண்டாவதாக உணரப்பட வேண்டியதாகும்.
தசாவதார தத்துவமே அழிவு தத்துவந்தான். திராவிட கலாச்சார அழிவு தத்துவந்தான்! – திராவிட கலாச்சார ஒழிப்பு தத்துவந்தான்.
நம்மையும் ஒழித்திருப்பார்கள்: மச்சாவதாரம் எடுக்கப்பட்ட காரணம் யாரோ ஒரு ராட்சதன் சாஸ்திரங்களை கொண்டுபோய் சமுத்திரத்தில் மறைத்துக் கொண்டான் என்பதுதான்.

நரசிம்ம அவதாரத்துக்குக் காரணம்! இரணியன் – விஷ்ணுவின் தலைமையில் புகுத்தப்பட்ட ஆரிய கலாச்சாரத்தை ஒப்புக் கொள்ள மறுத்தான். இராம. அவதாரத்துக்குக் காரணம் இராவணன் ஆரிய பண்புகளான யாகத்தை தடைசெய்தான் ஆரியர்களின் பரவுதலைத் தடுத்தான் என்பதுதான்! இப்படியாக ஒவ்வோர் அவதாரமும் ஆரிய கலாச்சார எதிர்ப்புகளை ஒழிப்பதற்கென்றே ஏற்பட்டவையாகும். அதுபோலவே சிவன், கந்தன், முதலியவர்களும், இவர்களைப் பயன்படுத்தி அவர்களை ஒழித்ததுபோல் நம்மையும் ஒழித்திருப்பார்கள்!

10.1.1950 இல் சிதம்பரம் பொதுக்கூட்டத்தில்
தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *