புலிவலம், மார்ச் 22 பெரியார் பெரும் தொண்டரும், தந்தை பெரியாரை மேடையில் வைத்து கொள்கை பாடலை பாடியவரும், தலைசிறந்த ஆசிரியரும் நல்லாசிரியர் விருது பெற்றவரும், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடல்களை மக்கள் மத்தியில் தன்குரலால் பாடி பரப்பியவரும், மேனாள் மண்டல செயலாளர் தோழர் க. முனியாண்டியின் வாழ்விணையருமான மு.சந்திரா 16.03.2025 அன்று மறைவுற்றார். 17.03.2025 அன்று காலை 10 மணிக்கு புலிவலத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் மாவட்ட கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்ட தலை வர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமை யில், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலி யன், நாகை மாவட்ட காப்பாளர் கி.முரு கையன் ஆகியோர் முன்னிலையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டு, இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழ் நாடு தாட்கோ தலைவர் உ.மதிவாணன், திருவாரூர் ஒன்றிய திமுக செயலாளர் ஏ.தேவா, மறுமலர்ச்சி திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆரூர் சீனிவாசன், ஆசிரியர் மன்ற மாநில தலைவர் பெ.இரா.இரவி, மாவட்ட காப்பாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ரெ.ஈவேரா, மாவட்ட துணைத் தலைவர் கி.அருண் காந்தி, நாகை மாவட்ட செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா, நாகை மாவட்ட மேனாள் செயலாளர் சிவா னந்தம், திருவாரூர் மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மாவட்ட விவசாயணி செயலாளர் க.வீரையன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் இரா.நேரு, கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவ.ஜெயக்குமார், திருவாரூர் ஒன்றிய தலைவர் கா.கவுதமன், திருவாரூர் ஒன்றிய துணைத் தலைவர் கு.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் செ.பாஸ்கர், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, செயலாளர் சீ.சரஸ்வதி, ஒன்றிய மகளிரணி செயலாளர் கவு.சரோஜா, ரத்தினம், கொரடாச்சேரி ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம், ஒன்றிய செயலாளர் மு.சரவணன்,வீரமணி, வடுவக்குடி பழனிச்சாமி திருவாரூர் சுரேஷ் சன், நன்னிலம் ஒன்றிய தலைவர் இரா.தன்ராஜ், ஒன்றிய ப.க. தலைவர் ச.கரிகாலன், கழக சொற்பொழிவாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, திருவாரூர் மாவட்ட ஆசிரியர் மன்ற மாவட்ட பிரதிநிதி இரா.சிவக்குமார், நகரத் தலைவர் கா.சிவராமன் நகரச் செயலாளர் ப.ஆறுமுகம், செதுராமன், திருநெய்பர் கோவிந்தராசு, ஆனைக்குப்பம் வை.ராமசாமி, மேனாள் மாவட்ட துணை செயலாளர் கோ.ராமலிங்கம், குடவாசல் ஒன்றிய செயலாளர் க.அசோக் ராஜ் ஆகியோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.