திருப்பூர், மார்ச் 22 திருப்பூர் கொங்கு நகர் பெரியார்படிப்பகத்தில் 16.3.2025 மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் ப.குமரவேல் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டகாப்பாளர் அ.ராமசாமி, மாநில இளைஞரணி துணை செயலாளர் ப.வெற்றிவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வேலு.இளங்கோவான், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு.நாச்சிமுத்து, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மு.துரைசாமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்தையா, மாநகர தலைவர் பா.மா.கருணாகரன், மாநகர செயலாளர் பெ.செல்வராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் துரைமுருகன், மாநகர பகுத்தறிவாளர் கழக தலை வர் சதாசிவம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர்கி ருஷ்ணவேணி, .திவ்யா.ஏ.மணிக்கண்டன், அவிநாசி முத்து சரவணன் அவிநாசி ராமு, அம்மாபாளையம் கணேசன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சிறப்புரை யாற்றினார். க.மைனர் நன்றி உரை யாற்றினார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன தந்தை பெரியாரின் கொள்கைகளை மேடை தோறும் முழங்கி வந்த கவிஞர் நந்தலாலா மறைவு தமிழ்ச் முகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும் அவரின் மறைவுக்குப் கலந்துரையாடல் கூட்டம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. மேட்டுப்பாளையம் மாவட்ட துணைத் தலைவர் பாசமலர் ஆறுமுகத்தின் வாழ்விணையர் சுப்புலட்சுமி மறைவிற்கும் கலந்து ரையாடல் கூட்டம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
15.2.2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு ‘விடுதலை’க்கு கோவை மாவட்டத்தில் விடுதலைச் சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95 அடி பெரியார் சிலை யுடன் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு மேட்டுப்பாளையம் மாவட்டத்தின் சார்பில் பெருமளவில் நிதி வசூல் செய்து தருவதென முடிவு செய்யப்படுகிறது
திருப்பூர் மாவட்டம் பகுதியில் உள்ள பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சார கூட்டங்களை நடத்துவது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் ஹிந்தி சமஸ்கிருதத்தை எதிர்த்து பண்பாட்டு பாதுகாப்பு பரப்புரை பொதுக்கூட்டம் அவிநாசியில் ஏப்ரல் 23 இல் நடைபெற சிறப்பான ஏற்பாடுகளை செய்வதென்றும் அனைத்துத் தோழர்களும் பெரும் திரளாக கூட்டத்தில் கலந்து கொள்வது என தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.