நாக்பூர் கலவரம் உருவாக்க இரண்டு மாதம் திட்டமிட்டு செயல்படுத்திய பாஜக ஹிந்துத்துவ அமைப்பினர்.
ஜனவரியில் கும்பமேளா குறித்த பரபரப்பு செய்திகள் ஓடிக்கொண்டு இருக்கும்போது கும்பமேளாவில் குளிக்க வராதவர்கள் எல்லாம் ஹிந்து விரோதிகள் என்று செய்தி பரப்புகின்றனர்.
அதே நேரத்தில் ஹிந்துத்துவாதிகள் அவுரங்கசீப் குறித்த கட்டுக் கதைகளையும் பாஜக மற்றும் ஹிந்துத்துவவாதிகள் வாட்ஸ் அப்பில் அனுப்பும் போலித் தகவல்களையும் மட்டுமே காட்சியாக அமைத்து படம் எடுக்கிறார்கள்.
மும்பையில் போராட்டம்
திரையரங்குகளில் சிறுவர்களும், பெண்களும் மனநோயாளிகள் போல் ஹிந்து தேசத்தைக் காக்க நான் சூழுரைப்பேன் என்று திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதும், திரைப்படம் முடிந்த பிறகும் உரக்கப் பேசுகிறார்கள். சிவாஜி மகன் வேடமிட்ட நபர் திரையரங்கில் குதிரையில் அமர்ந்த படி வந்து ஹிந்து எக்தா தேஷ்கே பவிஷ்ய(ஹிந்துக்களின் ஒற்றுமை நாட்டின் எதிர்காலம்) என்று உரக்கப் பேசுகிறார்).
திரையரங்குகளில் குதிரையில் வலம்
இவர்கள் பணம் கொடுத்து பேசவைக்கப் பட்டார்கள் என்பதை சமூகவலைதளப் பதிவுகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இது குறித்து கவலைப்படாமல் ஹிந்தி செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைகள் இந்தக் காட்சிகளை தொடர்ந்து செய்தியாக ஒலிபரப்புகிறார்கள்.
இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து ஒருமாதமாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது.
பாஜகவினர் தொடர்ந்து அவுரங்கசீப் தொடர்பாக ஒளிப்படங்களை ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தரையில் ஒட்டி இவர் மீது நடந்துசெல்லுங்கள், உமிழுங்கள் என்று தொடர்ந்து சொல்கிறார்கள்.
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. அபுஆஸ்மி
அவுரங்கசீப் கல்லறை உள்ள மகாராட்டிராவில் இந்த பிரச்சினை சட்டப்பேரவையில் வெடிக்கிறது.
அவுரங்கசீப் தொடர்பான வரலாற்று உண்மைகளைக் கூறிய சட்டமன்ற உறுப்பினர் அபு ஆசீம் இனிமேல் சட்டப் பேரவைக்குள் வரக்கூடாது. ஒரு தேசத்துரோகிக்கு ஆதரவாக பேசும் நபர் எப்படி மக்கள் பிரநிதியாக பிரச்சினைகளை நடுநிலையோடு பேசுவார் என்று கூறி சிறப்பு விதிகளின் மூலம் சட்டமன்ற உறுப்பினரின் அதிகாரத்தை பறிக்கும் நடவடிக்கையில் மகாராட்டிரா மாநில சட்டப்பேரவைத் தலைவர் இறங்குகிறார். தற்காலிமாக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். அவர் மீது வழக்கு தொடுக்கப்படுகிறது.
ஊடகங்களில் விவாதம்
10.03.2025 அன்று தேவேந்திரபட்னவிஸ் அவுரஙக்சீப் கல்லறை இடிக்கப்படும். ஆனால், காங்கிரஸ் தடையாக உள்ளது என்று கூறுகிறார்.
பஜ்ரங் தள் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் கல்லறையை இடிக்க மக்களின் ஆதரவை திரட்டி நாடு முழுவதும் பேரணி நடத்தப்படும் என்கிறது.
நாக்பூரில் இஸ்லாமியர்கள் வாழும் தெருக்களில் பேரணி நடத்த காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்கிறது. பேரணி துவங்கும் 300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன அவுரங்கசீப் உருவப் பொம்மை எரிக்கப்படுகிறது. அப்படியே இஸ்லாமியர்கள் புனிதமாக மதிக்கும் குரான் வாசகம் அடங்கிய துணிகள் எரிக்கப்படுகிறது.
அவுரங்சீப் படம் எரிப்புப் போராட்டம்
இதனை சமூக வலைதளங்களில் அனுப்பி இஸ்லாமியர்கள் குறித்து மோசமான சொற்களோடு பரப்புகிறார்கள்.
12.03.2025 அன்று மாலை நாக்பூரில் கலவரம் வெடிக்கிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 47 பேர் இஸ்லாமியர்கள்.
நாக்பூர் கலவரம்
பேரணி நடத்திய விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அடுத்த பேரணி மும்பை மற்றும் புனேவின் என்று அறிவிப்பு விட்டுள்ளனர்.