சென்னை, ஜூலை 9 நீதிபதி சந்துரு கலைஞர் நூலகத்திற்கு
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல் களை இலவசமாக வழங்கினார்.
மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூபாய் 134 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஜூலை 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலைஞர் நூற் றாண்டு நூலகத்தை திறந்து வைக்க உள்ளார். இந் நிலையில் வரும் 15ஆம் தேதி மதுரையில் திறக்கப்பட உள்ள கலைஞர் நூலகத்திற்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை இலவசமாக நீதிபதி சந்துரு வழங்கியுள்ளார். ஆங்கில புத்தகங்கள் 2492, தமிழ் புத்தகங்கள் 2222 என மொத்தம் 4714 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.