அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் கீழமாளிகை கிராமத்தைச் சார்ந்த பெரியாரின் பெருந்தொண்டர் பாவாடைராயனின் மூத்த மருமகளும் மறைந்த தமிழரசனின் வாழ்விணையரும் தோழர்கள் ஜெயபால், பாரதிதாசன் ஆகியோரின் தாயாருமான அம்மையார் மங்கையர்கரசி 20-03-2025 இரவு 10-30 மணியளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த அம்மையாருக்கு 21.3.2025, 3 மணியளவில் கழகத்தின் சார்பாக கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினார்கள். கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.