தமிழ்நாட்டில் நடக்கும் பத்திரிகை இது. தமிழன் காசு பணத்தில் பிழைப்பு நடத்தும் பத்திரிகை இது.
கொஞ்சமாவது தமிழ்நாடு, தமிழர் பிரச்சினையில் அக்கறை இருந்தால் இப்படிக் கேலிச் சித்திரம் போடுவார்களா?
உ.பி., பீகார், ம.பி. மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த மாநிலங்களில் பிஜேபி வெற்றி பெற்றாலே போதும். இந்தியாவையே ஆளலாம்; ஆர்.எஸ்.எஸ். கொள்கையைச் செயல்படுத்தலாம்; ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கலாம்.
இந்த மூன்று மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையும். ஹிந்தி பேசும் மாநிலங்கள் வைத்ததுதான் சட்டம் – மற்றவர்கள் திருவோடு ஏந்தத வேண்டியதுதான். சுத்த ரத்தவோட்டம் உள்ளவர்களுக்கு பி.பி. ஏறத்தான் செய்யும். தமிழர்களால் வயிறு வளர்க்கும் தினமலர் பார்ப்பனக் கும்பலுக்கோ மனம் குளிரத்தான் செய்யும். அதற்கு அடையாளம்தான் இந்தக் கார்ட்டூன்.
‘தினமலர்’ 20.3.2025 பக்கம் 9

Leave a Comment