மோசமான வானிலை காரணமாக பனிலிங்கத்தைக் காணும் பயணம் ரத்தாம்
சிறீநகர், ஜூலை 9- இமயமலைப் பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தைக் காண நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள். கடந்த ஜூலை 1 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான அமர்நாத் பயணம் கடந்த ஜூலை 1ஆம் தேதி துவங்கி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நிறைவடைகிறது.
ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மோசமான வானிலை காரணமாக அமர் நாத் பயணம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மலையில் உள்ள அமர்நாத் பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அமர்நாத் பயணம் மேற்கொண் டுள்ள பக்தர்கள் அச்சப்படத் தேவையில்லை. அதிகாரி களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். பேரிடர் மீட்புப் படையினர் ஏற்கெனவே பணியில் உள்ளனர். அந்த அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்ற பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என்று கூறப்பட்டுள்ளது.