தமிழ்நாடு சட்டப்பேரவை மேனாள் தலைவர், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பனுக்கு இன்று (20.3.2025) காலை திராவிடர் கழகம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் சால்வை போர்த்தி சிறப்பித்தார். மாவட்ட கழக செயலாளர் இரா.வேல் முருகன் புத்தகம் வழங்கினார். மாவட்ட ப.க.தலைவர் செ.சந்திரசேகரன் இனிப்பு வழங்கினார்.