ஒரு நாளில் 24 மணி நேரம் என்பதை நாம் அறிவோம். அது எப்படி நிர்ணயிக்கப்பட்டது என தற்போது பார்க்கலாம். பூமி தன்னைத் தானே சுற்றியபடி, சூரியனை சுற்றி வருகிறது. இதில் பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்ற சரியாக 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. அப்போது பகல், இரவு ஆகியவை மாறி மாறி வரும். இந்த 24 மணி நேரம்தான், ஒருநாள் என கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு மணி நேரமும் 60 நிமிடங்கள் ஆகும்.
செயற்கை இதயத்துடன் உயிர் வாழும் மனிதர்!
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக செயற்கை இதயத்துடன் 100 நாள் வாழ்ந்து ஒருவர் சாதனை படைத்துள்ளார். நியூ சவூத்வேல்ஸை சேர்ந்த அந்த நபருக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்பட, சிட்னியில் உள்ள மருத்துவமனையில் டைட்டானியத்தில் உருவாக்கப்பட்ட BiVACOR என்ற செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. அதனுடன் 100 நாள் வரை அவர் கடந்திருக்கிறார். உலகிலேயே 6 பேருக்கு மட்டுமே இதுவரை செயற்கை இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது.