கிருட்டினகிரி (மத்திய) மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அ.மாதேசு (17.3.2025) பிறந்தநாள் நிகழ்வில் திராவிடர் கழகம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை செயராமன், கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு இயக்க நூல்கள் வழங்கி சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அப்போது விசிக மாவட்டச் செயலாளர் அ.மாதேசு தனது பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ1,000/-ஆயிரம் மட்டும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. செயராமனிடம் வழங்கினார். அப்பொழுது எழுச்சித் தமிழரின் தனிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், ஓசூர் மாவட்டச் செயலாளர் இராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். விசிக கிருட்டினகிரி ஒன்றியச் செயலாளர் ஆலப்பட்டி இரமேசு, நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் சங்கர் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர விசிக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.