மும்பை, மார்ச் 20- மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் கூட்டம், மும்பை தாராவி கலைஞர் மாளிகை யில் 16.3.2025 மாலை 7:00 மணிக்கு மும்பை திராவிடர்கழகத் தலைவர் பெ.கணேசன் தலைமையில் நடை பெற்றது.
முன்னதாக மும்பை திராவிடர் கழகத் துணைத் தலைவர் இ.அந்தோணி கடவுள் மறுப்பு கூறி அனைவரையும் வரவேற்றார். முலூண்ட் ஆ .பாலசுப்பிரமணியன் அன்னை மணியம்மையார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து கூட்டத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் 1950இல் மும்பையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டுக்கு தலைவராக இருந்து அவர்கள் ஆற்றிய உரையின் சிறப்பை கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
மும்பை திராவிட முன்னேற்றக் கழகத்தைக் சேர்ந்த அன்பழகன் பொற்கோ, ம.நீதித்துரை, மும்பை திராவிடர்கழக செயலாளர் ஜே. வில்சன், மும்பை திராவிடர்கழக துணைச் செயலாளர் அ. கண் ணன், மும்பை திராவிடர் கழக பொருளாளர் பெரியார் பாலா, மகிழ்ச்சி மகளிர் பேரவை யைச் சேர்ந்த க.வளர்மதி, மும்பை பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.இரவிச்சந்திரன் பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் அ.மகேந்திரன், மனிதநேய அமைப்பைச் சேர்ந்த சங்கர் திராவிடர், திருவள்ளுவர் நற்பணி இயக்கத்தைச் சார்ந்த ந.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அன்னை மணியம்மையார் அவர்களின் தியாக வாழ்வை நினைவூட்டி பேசினர். நினைவேந்தல் நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவர் என்.வி.சண்முகராஜன், தொல். காம ராஜ், மும்பை பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் நெல்லையாகுமார், துணைத்தலைவர் ந. சிற்றரசு, சோ.ஆசைத்தம்பி, க.இராசன், முத்துச்சாமி, பூ.சு.அழகுராஜா, அம்பேத்கர் இயக்கத்தை சார்ந்த இரா.சுரேஷ் குமார், ஆரேகாலனி ஆர்.இராஜேந்திரன், க.அறிவுமதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இறுதியாக திராவிடர் கழக தாராவி கிளைக் கழகச்செயலாளர் மு.கணேசன் நன்றி கூறினார்.