20.3.2025
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*பீகார்: காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் நியமனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளி குழந்தை களிடையே கல்வியறிவு மற்றும் எண்ணறிவு குறைவாக இருப்பதை வருடாந்திர கல்வி நிலை அறிக்கை (ASER) எடுத்துக்காட்டும் நேரத்தில், தொடக்கக் கல்வி இயக்குநரகம் ஒரு ‘திறந்த சவாலைத் தொடங்கி, அதிகாரிகள், மேனாள் மாணவர்கள் மற்றும் பிறரை 4,552 பள்ளிகளுக்குச் சென்று தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் மாணவர்களின் தேர்ச்சியை நேரடியாக மதிப்பிட அழைத்துள்ளது.
*’ 480 நாட்கள் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்கலாம்’: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
*எஸ்.சி. பிரிவினரில் உள் ஒதுக்கீடு அளித்திட மசோதா; தெலங்கானா சட்டமன்றம் ஒருமனதாக ஒப்புதல்.
தி இந்து:
*ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோவில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்வதில் முக்கிய பங்கு வகித்த பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலின் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார், அவரது ஆய்வு, சிந்து சமவெளி நாகரிகத்துடன் திராவிட தொடர்புகளை நிறுவ வழி வகுத்தது.
* நாடு முழுவதும் நடைபெற இருந்த ரயில்வே வாரியத் தேர்வு ரத்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த வர்களுக்கு அய்தராபாத் மய்யம் அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் ரத்து செய்ததால் அங்கு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பரிதவிப்பு.
* நாக்பூர் கலவரம், வதந்தி அல்லது திடீர் எதிர்வினை என அலட்சியப்படுத்த முடியாது; மக்களை மத ரீதியாக ஒருமுகப்படுத்த, தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு திட்டமிட்ட செயல் என்கிறது தலையங்க செய்தி.
*தேர்தல் ஆணையர்கள் நியமனங்கள் தொடர்பான 2023 சட்டத்திற்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 16 அன்று விசாரிக்கும்.
தி டெலிகிராப்:
*மகா கும்ப கூட்ட நெரிசல் இறப்பு எண்ணிக்கை குறித்த தரவு ஒன்றிய அரசிடம் இல்லை’ என நாடாளுமன்றத்தில் அறிவிப்பு. தரவுகள் தரா கூட்டணி (என்.டி.ஏ.) என எதிர்க்கட்சிகள் கண்டனம்.
.- குடந்தை கருணா