அக்கம் பக்கம் அக்கப் போரு!

2 Min Read

இவ்வளவு தானா உங்க பவிசு?

விஜய் டி.வி.யின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான “நீயா? நானா?”வில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ”மும்மொழிக் கொள்கையை ஏற்பவர்களும், எதிர்ப்பவர்களும் பங்கேற்கும் நிகழ்ச்சி” ஒளிபரப்பப்படுவதாக இருந்தது. இதற்கான பதிவு கடந்த வாரம் நடைபெற்று சுடச் சுட தலைப்பு விவாதிக்கப்பட்டு , வெகுமக்களின் பெரும் எதிர்பார்ப்போடு ஒளிபரப்பப்பட இருந்தது.
ஆனால், அதே நேரத்தில் மும்மொழிக் கொள்கைக்குப் பதிலா, சூடான சமையல் விவாதம் நடந்திருக்கு. என்னன்னு எல்லாரும் விசாரிச்சுப் பார்த்தா… ஒன்றிய அரசுடைய அழுத்தம் காரணமாம். விவாதத்தில பல தரப்பும் பேசப்பட்டிருக்கும். மும்மொழிக் கொள்கை ஏன் தேவைன்னு கேட்டு, விவாதம் செஞ்சவங்க எழுப்பின கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம, ப்ளைட்டுக்கு லேட் ஆயிடுச்சுன்னு ஒரு சங்கி கிளம்பிட்டாராம்.
நேரா டெல்லி போய் இறங்கி, அமைச்சருக கிட்ட பொலம்பிருப்பாரு போல, அதான் நிப்பாட்டிட்டாங்கன்னு சமூக ஊடகங்கள் கிழிச்சு தொங்கவுட்ருக்கு! திரைப்பட இயக்குநர், பத்திரிகையாளர், கல்வியாளர்கள், குழந்தைகளுக்கான செயல்பாட்டாளர்கள்னு பலரும் கலந்துக்கிட்டிருந்திருக்காங்க.

மும்மொழிக் கொள்கையால் உலகளக்கலாம்னு அளந்து கொட்டுற ஆதரவாளர்கள் குரூப்பு, பதில் சொல்ல முடியாமல் முழி பிதுங்கிப் போயிருச்சாம். வழக்கமா லைவ்ல நடக்குற விவாத நிகழ்ச்சின்னு ஆட்டையக் கலைச்சு, நேரத்தை ஓட்டி ஒப்பேத்திடலாம். ஆனா, ‘நீயா நானா’ல தெளிய வச்சு தெளிய வச்சு அடிப்பாங்க. எவ்ளோ நேரம் ஆனாலும் ஷூட் பண்ணியே தீருவாங்க. அதனால அந்த டெக்னிக் வேலைக்கு ஆகாதுன்னுட்டு, நிகழ்ச்சி ஒளிபரப்பாகாம தடுத்திருக்காங்க..
தமிழ்நாட்டுல வர்ற டி.வி., சினிமால்லாம் பாக்குறதுக்குன்னே ஒரு அமைச்சரை உட்கார வச்சிருக்காங்கல்ல டெல்லியில!
ஏம்ப்பா… மும்மொழிக் கொள்கைன்னா அப்படி, இப்படின்னு வரிஞ்சு கட்டுறீங்க… அது தான் தமிழ்நாட்டைப் பெருசா எடுத்துட்டுப் போகும்னு சொல்றீங்க. கல்வியில் பெரிய புரட்சின்றீங்க…

அதை எடுத்துச் சொல்லி விவாதிக்கக்கூட தெம்பில்லையா? விளையாடத் தெரிஞ்சவன் பந்தை அடிப்பான். விளையாடத் தெரியாதவன் காலை அடிப்பான்! ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் கருத்து நேர்மையா இருக்கும்!?
எப்பா ஹிந்து சப்போர்ட்டர்ஸ், இவ்வளவு தானா உங்க பவிசு?

– குப்பைக் கோழியார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *