ஆவடி, மார்ச் 19- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் பூவிருந்தவல்லி நகர செயலாளர் தி.மணிமாறன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமை உரையில் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் மற்றும் மாவட்ட கழகத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார்.மாவட்ட செயலாளர் க.இளவரசன் மாவட்ட வரவு- செலவு கணக்கை அறிவித்த பின் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து சிறப்பாக நடத்துவது.
2024-2025 ஆண்டு விடுதலை சந்தா நிறைவு பெற்றவர்களை அணுகி சந்தா புதுப்பிக்கவும் புதிய சந்தாதாரர்களை சேர்க்க தீவிர முயற்சி செய்வது
மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் துண்டறிக்கை மூலம் பிரச்சாரம் செய்வது
கழக குடும்ப விழா நடத்த முயற்சி செய்வது என மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 2025 மார்ச் மாதம் 11ஆம் நாள் 52ஆவது இணையேற்பு நாள் காணும் மாவட்ட துணை தலைவர் மு.ரகுபதி- ராணி ரகுபதிக்கும், மார்ச் 12 பிறந்த நாள் கண்ட மாவட்ட தலைவரின் வாழ் விணையர் கா.வனிதாவுக்கும் மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
தீர்மானங்கள் மற்றும் கழக வளர்ச்சி குறித்தும் மாவட்ட துணைத் தலைவர் மு.ரகுபதி, துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் வி.சோபன்பாபு, செயலாளர் சு.வெங்கடேசன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணி ரகுபதி, மகளிர் பாசறை செயலாளர் அன்புச் செல்வி,ஆவடி நகர தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, துணைத் தலைவர் சி.வச்சிரவேல், திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் ( எ) அருள் தாஸ், செயலாளர் ரவீந்திரன், திருநின்றவூர் நகர இளைஞரணி செயலாளர் மா.சிலம்பரசன், ஆவடி புருஷோத்தமன், சுந்தர்ராஜன் ஆகியோர் உரையாற்றினர்.நிகழ்வில் ஆவடி மாவட்ட கழக துணை தலைவர் வை.கலையரசன், பட்டாபிராம் பகுதி தலைவர் வேல்முருகன், பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், ஆவடி நடராசன், பூவை லலிதா, அரிகிருட்டினன், பெரியார் பிஞ்சு தருண், ஆவடி சுந்தராம்பாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.அம்பத்தூர் பகுதி கழக செயலாளர் அய்.சரவணன் நன்றி கூறினார்.