அரூர், மார்ச் 19- அரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையர் 106-ஆம் ஆண்டு பிறந்த நாள், மற்றும் நினைவு நாள் கருத்தரங்கம் 16-3- 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.இராஜேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட கழக தலைவர் அ. தமிழ்ச்செல்வன் தலைமையேற்று நடத்தினார். மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் வடி வேலன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பெ. அன்பழகன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பொன்முடி, கிருஷ்ணகிரி மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ், ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் சிவராசன்,மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள், பெ. கல்பனா,பெ. உமா, மணிமேகலை, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யனார், அரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சஞ்சீவன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர். மாவட்ட துணைத் தலைவர் சா.பூபதிராஜா அனைவரையும் வரவேற்று பேசினார்.
கருத்தரங்கம்
திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊமை ஜெயராமன் தொடக்க உரையாற்றினார். பெரியார் என்னும் பெரும் நெருப்பு என்னும் தலைப்பில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், பெரியார் கண்ட புதுமைப் பெண்கள் என்னும் தலைப்பில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, பெரியார் பாதையில் பெண்கள் என்னும் தலைப்பில் மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, பெரியாரும் பெண் கல்வியும் என்ற தலைப்பில், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சா. இராஜேந்திரன் ஈரோட்டை நோக்கி இனமான பெண் என்ற தலைப்பில் கவிஞர் கீரை. பிரபாகரன், மணியம்மையாரின் தொண்டு என்ற தலைப்பில் கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி தலைவர் இந்திரா காந்தி, பெரியாரும் சுயமரியாதை திருமணமும் என்ற தலைப்பில் மா. செல்லதுரை ஆகியோர் கருத்தரங்க உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் கடத்தூர் நகர தலைவர் இரா. நெடுமிடல், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யனார், கடத்தூர் ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், அரூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் என்.டி. குமரேசன், ஆசிரியர் வேப்பிலைப்பட்டி சி. தீத்து, மாம்பாடி சீ. புஷ்பலிங்கம், பே. தாதம்பட்டி வேளாங்கண்ணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.