புதுச்சேரி, ஜூலை 8 – புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர் “பெரியார் பெருந்தொண்டர்” பிரெஞ்சு அரசில் சிப்பா யாக பணியாற்றி ஓய்வு பெற்ற புதுச்சேரி கால்பந்தாட்டக் கழகத் தலைவர் எழிலன் இராமகிருஷ்ணன் 1.7. 2023 அன்று தனது 96ஆம் வயதில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
தகவல் அறிந்ததும் புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் வே. அன்பரசன், மாவட்ட துணைத் தலைவர் மு. குப்புசாமி, புதுச்சேரி நகராட்சி தலைவர் மு. ஆறுமுகம், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச் செல்வன், பெரியார் பெருந்தொண்டர் எஸ். கிருஷ்ண சாமி, வாணரப்பேட்டை இரா. ஆதிநாராயணன்,ஆ.சிவ ராசன் ஆகியோர் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண் டனர். முன்னதாக அய்யாவின் உடலுக்கு அவர்களின் குடும்பத்தார் விருப்பப்படி கழகக் கொடி போர்த்தப்பட்டது.