பனந்தோப்பு, மார்ச் 18- பனந் தோப்பு சமத்துவபுரம் திராவிடர் கழகக் கிளை துவக்க விழா கழகக் கொடி ஏற்றுதல் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா 15.03.202 சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில் கந்திலி ஒன்றியம், பனந்தோப்பு சமத்துவ புரத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு கழக கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ் மற்றும் கந்திலி ஒன்றியச் செயலாளர் இரா. நாகராசன் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைத்தார். மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன், இந் நிகழ்வுக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வே. அன்பு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோ. திருப்பதி, காக்கங்கரை கிளை தலைவர் சி. சந்தோஷ், நக்கி நாயக் கன்பட்டி கிளை தலைவர் எம். சரவணன், லக்கி நாயக்கன்பட்டி செயலாளர் சி. லட்சுமணன், கண்ணாலப்பட்டி கிளை கழக தலைவர் தசரதன், கெஜல் நாயக்கன் பட்டி கிளை தலைவர் திருப்பதி, கெஜல் நாயக்கன்பட்டி கிளை செயலாளர் க.இளையராஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றினார்.அவர்தம் உரையில் சிதம்பரம் பொதுக்குழு தீர்மானப்படி இந்த நிகழ்வை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் குறைந்தது 20 புதிய கிளைகள் உருவாக்கி கழக கொடிகள் ஏற்றப்படும். தந்தை பெரியார் கொள்கைகளை மேலும் மிக வலிமையாக மக்கள் மத்தியில் பரப்பப்படும். இது காலத்தின் தேவை என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும், இந் நிகழ்வில் பங்கேற்று தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மகளிரணி மாநில பொருளாளர் எ.அகிலா, மகளிரணி மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, கிருஷ்ணகிரி மாவட்ட மகளிரணி தலைவர் இந்திரா காந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அவர்கள் தம் தம் உரைகளில் கழக கொடியின் கருப்பு, சிவப்பு நிறம் எதை குறிக்கிறது என்பதை குறித்தும், மணியம்மையார் தந்தை பெரியாருக்கு செய்த அருந் தொண்டுகள், அய்யாவுக்கு பிறகு அன்னையின் இயக்கப் பணிகள் குறித்தும்,திராவிட மாடல் அரசு மகளிருக்கும் அளிக்கும் உரி மைகள் குறித்தும், அந்த உரிமை வழங்களின் தொடர்ச்சியாக இந்தாண்டு பட்ஜெட்டில் அசையா சொத்துகள் பத்து இலட்சத்திற்கு மேல் இருந்து அதை பத்திரப் பதிவு செய்தால் பத்திரப் பதிவுக் கட்டணம் 1% குறைக்கப்படும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பு பெண்களின் உரிமைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அமையும், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வரும் சமூக நீதி காவலர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி. எ. சிற்றரசன், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம்.என்.அன்பழகன், மாவட்ட மகளிரணி காப்பாளர் விஜயா அன்பழகன்,மாவட்ட இளைஞரணி தலைவர் சி. சுரேஷ் குமார், மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் நா. சுப்புலட்சுமி, மாவட்ட மகளிரணி தலைவர் இரா. கற்பகவல்லி, மாவட்ட துணைச் செயலாளர் ஏ. டி. சித்தார்த்தன், நகர இளைஞரணி செயலாளர் கா. நிரஞ்சன், சுந்தரம் பள்ளி கிளை தலைவர் கோ. சங்கர், தொழிலாளரணி க. முருகன், தொழிலாளரணி ஆலோசகர் அக்ரி அரவிந்த், மாணவர் கழக தோழர் பச்சமுத்து, க. இனியவன், க. உதயவன், மற்றும் பனந்தோப்பு சமத்துவ ஊர் மக்கள் என்று ஏராள மானோர் பங்கேற்றனர்.
பனந்தோப்பு சமத்துவபுர கழகக் கிளை அமைப்பாளராக நா. கயல்விழிக்கு பொறுப்பு வழங்கப் பட்டது.
இந்நிகழ்வில் அப் பகுதியை சார்ந்த மகளிர் சுமார் 20 நபருக்கு பெண் ஏன் அடிமையானாள்? புத்தகத்தை மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் நா. சுப்புலட்சுமி அவர்கள் வழங்கினார்.
நன்றி உரை நல்கிய கந்திலி ஒன் றியத் தலைவர் பெ. ரா. கனகராஜ் முப்பெரும் நிகழ்விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் கறி விருந்து அவர் இல்லத்தில் வழங்கினார்.